ஒருவர் ஜாதகத்தில் 2 திருமணங்கள் இருப்பதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது?
ஜோதிடம் என்பது நம்முடைய எதிர்காலத்தை தெரிந்து கொள்ள உதவும் வழிமுறையாகும். அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் இரண்டு திருமணம் இருப்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது? மேலும் ஜாதகத்தில் இரண்டு திருமணம் இருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியுமா? என்பதை பற்றியும் பார்ப்போம்.
இங்கு திருமண வாழ்க்கை என்பது பலருக்கும் இனிமையாக அமைவதில்லை. பலருக்கு பல சிக்கல்களில் தான் திருமணம் தொடங்குகிறது இன்னும் சிலருக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து பிறகு சில சிக்கல் கொடுக்கிறது. சிலருக்கு திருமணமே நடைபெறாமல் இருப்பதையும் நாம் பார்க்க முடியும்.
அப்படியாக ஒருவர் ஜாதகத்தில் திருமணம் என்று வரும்பொழுது இரண்டு விஷயங்களை தான் கவனிப்பார்கள். அதில் ஒன்று செவ்வாய் தோஷம் மற்றொன்று ராகு கேது தோஷம். அதாவது ஒருவர் லக்னத்திற்கு 2,4 ,7, 8, 12 செவ்வாய் இருந்தால் அவை செவ்வாய் தோஷம் ஆகும். அதுவே லக்னத்திற்கு 2,7,8 ஆகிய இடங்களில் ராகு கேது இருந்தால் அவை ராகு கேது தோஷம் ஆகும்.
இந்த இடங்கள் எல்லாம் காதல் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையில் குறிப்பிடக்கூடிய இடம் ஆகும். மேலும், செவ்வாய் கிரகம் ஏழு எட்டு ஆகிய இருந்தால் காதல் உணர்வு அந்த ஜாதகருக்கு அதிக அளவு இருக்கும். அதனால் அவர்களுக்கு திருமண பார்க்கும் பொழுது துணை ஜாதகத்திலும் செவ்வாய் 7 8ல் இருப்பவர்களை திருமணம் செய்து வைப்பது நல்லது.
மேலும் ஒரு ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் அவர்கள் வயது மூத்த பெண்ணை காதலிப்பார்கள்.
அதேபோல் 7ஆம் வீட்டில் நீச கிரகம் இருந்தால் அல்லது ஏழாம் வீட்டில் சனி சுக்கிரன் இருந்தால் அவர்களுக்கு திருமணமான கணவரை பிரிந்த பெண்ணுடன் திருமணம் நடப்தற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் லக்னத்திற்கு ஏழு எட்டில் ராகு கேது உள்ள ஜாதகத்துடன் அதே அமைப்பு கொண்ட ஜாதகத்தை சேர்ப்பதன் வழியாக அவர்களுடைய வாழ்க்கை சமநிலையில் ஒத்துப் போகிறது. இல்லை என்றால் அவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் வந்து பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆதலால் திருமணம் செய்யும்பொழுது ஒரு சில விஷயங்களை நாம் கவனித்து செய்தால் நமக்கான வாழ்க்கை துணியை நாம் தேர்ந்தெடுத்து சந்தோஷமான வாழ்வை வாழலாம். ஆனால் காதல் திருமணம் என்று வந்துவிட்டால் நிச்சயம் திருமண பொருத்தத்தை அவர்கள் எப்பொழுதும் பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்களுடைய சுயஜாதகத்தை பரிசீலனை செய்வதற்காக அவ்வப்பொழுது பார்த்துக் கொள்ளலாமே தவிர திருமணம் முடிந்த பிறகு இருவருடைய ஜாதகத்திற்கும் பொருத்தம் பார்த்து செயல்படுவது என்பது சில மனக்கசப்புகளை கொடுத்து விட வேண்டும். அதனால் அதை தவிர்ப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







