ஒருவருக்கு ஜாதக ரீதியாக எப்பொழுது குழந்தை பிறக்கும்.. தெரிந்து கொள்வது எப்படி?

By Sakthi Raj Jul 30, 2026 07:28 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக கிரக அமைப்புகளைக் கொண்டு நாம் ஒருவருக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் என்பதை பற்றி நாம் சரியாக தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஜோதிட ரீதியாக ஒருவருக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஒருவருக்கு ஜாதகத்தில் ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிக்க கூடியதாக இருக்கிறது. இந்த ஐந்தாம் வீட்டு அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று குருவின் பார்வையை பெறுவதும் அந்த நபருக்கு அறிவு சார்ந்த மற்றும் நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கான முக்கிய அடையாளமாக திகழ்கிறது.

யாருடைய சாபத்திற்கு அதிக சக்தி உள்ளது? சாஸ்திரம் சொல்வது என்ன?

யாருடைய சாபத்திற்கு அதிக சக்தி உள்ளது? சாஸ்திரம் சொல்வது என்ன?

அதேபோல் ஐந்தாம் இடத்தில் சனி பகவான் அல்லது ஐந்தாம் வீட்டில் சனி பார்க்கிறார் என்றால் அவர்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக அவர்களை நிலை நிறுத்திய பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தை கொடுக்கிறது.

அதேபோல், ஒருவருக்கு ஐந்தாம் இடத்தில் ராகு மற்றும் கேது பகவான் இருக்கிறார் அல்லது ஐந்தாம் வீட்டு அதிபதியுடன் சேரும் பொழுது இவர்களுக்கு சில மருத்துவ சிக்கல்கள் ஏற்படலாம்.

இவர்கள் கந்த சஷ்டி கவசம் மற்றும் கர்ப்ப ரக்ஷாம்பிகை ஸ்தோத்திரம் போன்ற ஆன்மீகப் பாடல்களைக் கேட்பது நல்ல மாற்றங்களை கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US