ருத்ராட்சத்தை தவறியும் இந்த நிற நூலில் மட்டும் அணியாதீர்கள்
ருத்ராட்சம் என்பது சிவ சின்னங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ருத்ராட்சம் சிவபெருமானுடைய கண்ணீர் துளிகளில் இருந்து உருவான விருட்சம் எனவும் கருதப்படுகிறது. மேலும் சமஸ்கிருதத்தில் ருத்ராட்சம் என்பது " ருத்ரன்" என்று சிவபெருமானை குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. அக்ஷம் என்றால் கண் என்று அர்த்தம்.
ஆதலால் சிவபெருமான் கண்ணிலிருந்து தோன்றியதால் இந்த ருத்ராட்சம் மிக பெரிய அளவில் தெய்வீக ஆற்றல் பெற்றதாக இருக்கிறது. மேலும், ஒருவர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கிறது.

அதாவது ஒரு ருத்ராட்சம் அணிய தொடங்கிய நாள் முதல் அவர்களுக்கு ஆன்மீகத்தில் ஒரு நல்ல தெளிவும் மனநிலையில் ஒரு நல்ல மாற்றமும் அவர்கள் பெறுகிறார்கள். முக்கியமாக உலகத்தில் எது உண்மை? பொய் என்று சரியாக வகுத்து வாழக்கூடிய ஆற்றலை இந்த ருத்ராட்சம் அணிவதால் ஒருவருக்கு கிடைக்கிறது.
மேலும், ஒருவர் ருத்ராட்சம் அணிவதை விட அவர்கள் ருத்ராட்சத்தை எந்த நூலில் அணிந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்து நமக்கு பலன் மாறுகிறது. அப்படியாக எந்த நூலில் ருத்ராட்சம் அணிவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கிறது? என்பதை பற்றி பார்ப்போம்.
1. ஒருவர் சிவப்பு நூலில் ருத்ராட்சம் அணிவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பும் தைரியமும் கிடைக்கிறது. தீய சக்திகளில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். மனதில் இருக்கக்கூடிய கவலை பயம் எல்லாம் விலகுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு அதனுடைய பாதிப்பு குறைகிறது.
2. கருப்பு நூலில் ருத்ராட்சம் அணிவதால் அவர்களுக்கு திருஷ்டி விலகுகிறது. வாழ்க்கையில் சந்திக்கின்ற அத்தனை துயரத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தாக்கத்தில் இருந்து இவர்கள் விடுபடுகிறார்கள். சனி ராகு தோஷம் இருந்தாலும் அவை நிவர்த்தி ஆகிறது.

3. வெள்ளை நூலில் ருத்ராட்சம் அணிவதால் அவர்களுக்கு மன அமைதி மற்றும் ஆன்மீகத்தில் வளர்ச்சி கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் அவர்கள் சொல்லக்கூடிய வாக்கு பலிக்க கூடிய யோகம் பெறுகிறார்கள்.
4. ஒருவர் மஞ்சள் நூலில் ருத்ராட்சம் அணிவதால் அவர்களுக்கு ஞானம் பெருகுகிறது மற்றும் குரு உடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது. கல்வியில் முன்னேற்றம் மற்றும் குருபகவான் உடைய தோஷம் நிவர்த்தி ஆகிறது.
5. ஒருவர் பச்சை நூலில் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் மேம்படுவதோடு செல்வம் பெருகி தொழிலில் நல்ல வளர்ச்சியும் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |