12 ராசிகளிடமும் இருக்கக்கூடிய மிக மோசமான குணம் என்ன தெரியுமா?
மனிதன் பல உணர்ச்சிகளின் கலவையாகவே இருக்கிறான். ஆக அவனிடம் அன்பு, கருணை, பழிவாங்குதல் போன்ற எல்லா எண்ணங்களையும் நாம் பார்க்க முடியும். அப்படியாக மனிதர்களாக எல்லாருக்குமே யாரேனும் ஒருவர் ஒருவருக்கு தீங்கு செய்து விட்டால் அவர்களை பழிவாங்க கூடிய எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
பழிவாங்குதல் என்பது அந்த நபரை நேராக பார்த்தால் ஏதேனும் ஒரு வார்த்தையாவது கேட்டு விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் துவங்கி மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு பாதிப்பை கொடுக்க வேண்டும் என்ற அளவிற்கு இந்த எண்ணமானது இருக்கிறது.
அப்படியாக, 12 ராசிகளும் எப்படி பழி வாங்குவார்கள்? அதாவது யாரேனும் அவர்களை துன்பப்படுத்தி துரோகம் செய்து விட்டார்கள் என்றால் எவ்வாறு பழி வாங்குவார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் உடனடியாக ஒரு நபரை பழி வாங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு பொருத்தவரை இவர்கள் சரியான நேரம் வரும்வரை காத்திருந்து பழி வாங்கக்கூடிய எண்ணம் கொண்டவர்கள்.
மிதுனம்:
ஒருவரிடம் நன்றாக பழகி அவர்களைப் பற்றி நன்கு அறிந்த பிறகு ஒரு நல்ல சமயம் வரும் வேளையில் பழிவாங்கி விடுவார்கள்.
கடகம்:
கடக ராசியினர் மிகக் கொடூரமாக பழி வாங்கக்கூடிய எண்ணம் கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசியினர் அதிரடியாக ஒருவரை பழி வாங்கக் கூடியவர். மிகவும் ஆபத்தானவர்கள் கூட.
கன்னி:
கன்னி ராசியினர் மிகவும் நிதானமாக பொறுமையாக இருந்து ஒருவரை பழிவாங்க கூடியவர்கள். இவர்கள் பழி வாங்குகிறார்கள் என்பதே பலருக்கும் அறியாத நிலையில் இவர்கள் செயல் படுவார்கள்.
துலாம்:
துலாம் ராசியை பொறுத்தவரை யாரேனும் தவறு செய்து விட்டால் நான் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் அளவிற்கு இவர்கள் பழி வாங்கக் கூடியவர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியனர் மிகவும் துன்புறுத்தலாக ஒருவரை பலி வாங்குவார்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தனுசு:
தனுசு ராசியினர் யாரிடமும் எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் யாரேனும் எல்லை மீறி சென்று விட்டால் நிச்சயம் பழிவாங்க தயங்க மாட்டார்கள்.
மகரம்:
மகர ராசியை பொறுத்தவரை இவர்கள் மிகவும் தனித்துவமான முறைகளை பின்பற்றி ஒருவரை பழி வாங்கக் கூடியவர்கள்.
கும்பம்:
கும்ப ராசியினர் உடனடியாக ஒருவரை பழிவாங்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். நிதானமாக பல வருடமானாலும் காத்திருந்து பழிவாங்க கூடியவர்கள்.
மீனம்:
மீன ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். ஆதலால் இவர்கள் எவ்வளவு பெரிய எல்லைக்கும் சென்று ஒருவரை பழிவாங்க துணியக் கூடியவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |