மனமது செம்மையானால்
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே - அகத்தியர்
இது வேண்டாம் அது வேண்டாம் என்பது கேட்க நன்றாக உள்ளது தான் ஆனால் இந்த மனம் எப்போது செம்மை ஆகுறது இதுல்லாம் நடக்குறது.,
மனம் செம்மை ஆக வேண்டும் என்றால் மனதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அது எப்படி என பார்ப்போம்
உங்களுக்கு அமேரிக்காவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் தெரியலாம், தமிழ் நாட்டின் சக்தி வாய்ந்த கோவில்கள் தெரிந்திருக்கலாம், ஒவொரு ஊரிலும் எது சிறப்பானது அங்கு சென்றால் எங்கு தங்கலாம் சாப்பிடலாம் என்று கூட தெரிந்திருக்கலாம்., ஏன் கேள்வி என்ன என்றால் உங்களுக்கு உங்களைப் பற்றி தெரியுமா?
நீங்கள் யார்? உங்கள் குணம் என்ன? உங்கள் தரம் என்ன? உங்கள் உடலின் தாங்கும் சக்தி எப்படிப்பட்டது? இதெல்லாம் தெரியுமா?
ஒரு உதாரணம் சொல்கிறேன்... உங்களை நீங்கள் புரிந்து கொள்வதற்கு
ஒரு சிறுவன் தாயுடன் முதல் முறையாக ஊரில் இருக்கும் மாமா வீட்டிற்கு விடுமுறைக்கு செல்கிறான். உறவினர்கள் இவனை கொண்டாடுகின்றனர், மாமா மட்டும் வர வில்லை, மாமா எங்கே என கேட்க பணி நிமித்தமாக சென்றுள்ளார் நாளை வருவார் என கூறுகின்றனர்.,
மாமா ரொம்ப கோவக்காரர் டா தம்பி அவரிடம் கவனமாக இரு சட்டுனு கோபம் வந்து அடிச்சிடுவார் என அம்மா கூற சிறுவன் மனதில் மாமாவை பார்க்காமலேயே மாமாவை பற்றின முதல் பதிவு பதியபட்டது.,
மாமா வந்தார்., பண்டம் வாங்கிவந்தார் அனைவருக்கும் கொடுத்தார் சிறுவனை கூப்பிட ஓடி ஒளிந்து கொண்டான்., மாமா தான் அடிப்பாரே என்று.,
அடுத்த நாள் எல்லோரும் குல தெய்வ கோவிலுக்கு செல்கிறார்கள் மாமா மட்டும் Bike ல் வர நான் சிறுவனை கூட்டிட்டு வரேன் நீங்க கிளம்புங்க என சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டார்., தூக்கம் கலைந்து எழுந்த சிறுவன் அம்மாவை தேடி காணாது மாமாவை பார்த்து பயந்து Room க்கு உள்ளேயே இருந்தான்., கெளம்பு டா தம்பி போலாம் என மாமா கூறியதும் பதறி அடித்து கெளம்பி வந்தான்.. இல்லேனா அடிச்சிருவார்ல.,
Bike ல் போகும் போது ஒரு park வழியா செல்ல சிறுவன் park ஐ ஆசையோடு பார்க்க Bike park பக்கம் நின்றது க்கு
கொஞ்ச நேரம் விளையாடிடிட்டு போவோமா என்றார்
சிறுவன் முகத்தில் மகிழ்ச்சி..
பஞ்சுமிட்டாய், மாங்கய், பலூன், யானை பொம்மை எல்லாம் வாங்கி தந்தார் மாமா,. சீசவில் உக்காந்து விளையாட்டு, தூரி, சறுக்கு மரம் என மாமாவுடன் ஆட்டம் பாட்டம் தான்
மாமா நல்லவர் தான் இந்த அம்மா தான் தப்பா சொல்லிட்டு என இனொரு எண்ணத்தை மேல் பதிவாக உள்ளே போட்டான் சிறுவன் கோவில் சென்று வரும் வரை மாமாவுடன் தான் இருந்தான்.,
இதுவரையில் நிறுத்துக்கிறேன்
இந்த கதையில் இந்த சிறுவன் போலவே நாம் ஒருவரை அல்லது ஒரு நிகழ்வை சந்திக்கும் முன்னே அது குறித்து முன் முடிவை எடுத்து அதிலேயே நிலைத்து அந்த நபரை நிகழ்வை அனுகுகிறீர்கள்., இது சரியா? உங்கள் மன பதிவுகள் யாரால் எழுதப் படுகின்றது என சிந்தித்தது உண்டா?
அவர்களின் நடவடிக்கையின் படியா? அது சூழ்நிலை காரணமாய் அடிக்கடி மாறும் எனும் போது ஒரு முறை எழுதிய பதிவிலிருந்தே அவரை அணுகுவது முறையா?
உண்மையில் உங்களுக்கு சரியாக உங்களுக்குள் எழுத தெரியவில்லை
எனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என எதயோ எழுதிவிட்டு பின் அற்கு முரண்பட்டால்., முடியாது என மறுப்பது.,
Lift ல் சென்று பழகி சுகம் கண்டுவிட்டால் படி ஏறி செல்ல மனம் வருமா? Lift பயன் படுத்தலாம் தவறில்லை நேரம் மிச்சம்மாகும், எங்கு தெரியுமா முரண் வரும் நான் lift இல்லையென்றால் நடக்க மாட்டேன் என்னால் முடியாது என முடிவு கட்டும் போது தான்
உங்களை பற்றின தப்பான ஒரு கருதுகொள் உங்கள் மனதில் பதிவானது., அதன் படி நடந்துகொண்டு அதை பழக்கம் ஆக்குவீர்கள்,.
நான் AC இல்லாமல் இருக்க மாட்டேன், Fan போடாமல் யாராவது இருப்பாங்களா? என்னால் நடக்கலாம் முடியாது., இதெல்லாம் உங்களால் உங்களுக்குள் எழுதப்பட்ட தவறான பதிவுகள்
முதன் முதலாய் கால் மடக்கி அரை மணி நேரம் அமர்ந்தால் கால் மருத்துப்போகும் தான்., தொடர்ந்து அமர்ந்து பழக, நாள் கணக்கில் அமர முடியும் ஆனால் 3 முறை அமர்ந்ததுமே என்னால் தரையில் எல்லாம் உட்கார முடியாது என்று எழுதி விடுகிரீர்
இது என்ன விளைவை கொடுக்கும் தெரியுமா?
ஒரு உறுப்பினை சரியாக முறையாக அதன் முழு திறனை பயன் படுத்தாமல் மந்தமாக இருக்க அந்த உறுப்பின் தேவை குறைந்து அதில் ஓடும் ரத்த ஓட்டம் காற்று ஓட்டம் உயிரோட்டம் குறைந்து வீரியம் தடைப்பட்டு ஆற்றல் குறைகின்றது இதனாலும் நாள்பட்ட நோய்கள் வந்து தங்கிவிடுகின்றன
மாமா நல்லவர் தான் என சிறுவன் போட்ட மேல் பதிவு மாதிரி போட்டு மனதை மாற்றாமல்
நான் நோயாளி ஆகி விட்டேன் என ஒரு பதிவை போட்டு நோயாளியாகவே மாறி விடுகிரீர்
சந்திரமுகி படத்தில் வரும் வசனம் மாதிரி
கங்ககா சந்திரமுகியா தன்னை நினைச்சிகிட்டா, சந்திரமுகியா நின்னா, சந்திரமுகியா மாறினா,. இப்படி தான் சந்திரமுகி கங்காவை அடைஞ்சா என்பது போலவே
நீங்க உங்களை பத்தி தப்பா நினச்சி., அதையே நம்பி, அதான் படி வாழ்ந்து, அதுவாவே மாறிடுறிங்க.
அதனால் தான் மருத்துவ மனைக்கும், நீதி மன்றங்களுக்கும், மனநல மருத்துவர்களுக்கும், சில மோசமான ஜோதிடர்களுக்கும் போலியான ஆன்மீகவாதிகளும் உங்களை பயன் படுத்திக்கிறாங்க அவங்க பயன்படுத்துறாங்க னு தெரியாமலே ஏமாந்துட்டு இருக்கீங்க
உங்களை பத்தியே உங்களுக்கு சரியா தெரியலனு ஒரு பக்கம் இருக்க இதுல அடுத்தவங்கள பத்தி., அவங்க இப்படி அப்படி னு நினைச்சிக்குறிங்க வேற!!!
காயத் தேர் ஏறி மனப்பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே - திருமூலர்
முதல் இரண்டு வரி தான் நாம் பேசும் கருத்து தொக்கி நிற்கும் இடம் திருமூலர் மனதைப் ‘பாகன்’ எனக் கூறுகிறார். பாகன் சொன்னபடிதான் யானை கேட்க வேண்டுமே தவிர, யானை சொன்னபடிப் பாகன் கேட்கக்கூடாது. கேட்டால் யானை மட்டுமல்ல, அத்துடன் சேர்ந்து பாகனும் போய் விடுவார். அதுபோல, மனம் காட்டும் நல்வழியில்தான் உடம்பு செயல்பட வேண்டுமே தவிர, உடம்பு கேட்கும் வழியில் மனம் செயல்பட ஆரம்பித்தால் கதை முடிந்து விடும்.
இந்த மனம் மாறினால் தான் செம்மை ஆகும்
உங்களை பத்தி முதலில் சிந்திங்க., நீங்க எந்த எல்லைக்குள்ள இருக்கீங்க னு கண்டுபிடிச்சி உங்கல கட்டி போட்டு இருக்குற எல்லா வட்டத்தையும் உடைத்து ஏறியுங்கள்., என்னத்தில் மேல் பதிவு போடுங்க., மனதை உங்கள் வசம் திருப்பி வலம் பெறுக.
வாழ்க வளமுடன்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |