2026 ஆண்டின் மிக நீண்டமான நாள் எது தெரியுமா? அன்று இந்த விஷயம் செய்ய மறக்காதீர்கள்
2026 ஆம் ஆண்டு 21ஆம் தேதி வானியல் ரீதியாக மட்டுமல்லாமல் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அதாவது இந்த வருடத்தின் மிகவும் நீண்டமான நாள் என்ற ஒரு சிறப்பை இந்த நாள் பெறுகிறது.
இந்த நாளில் சூரிய பகவான் கடக ரேகையின் மீது நேரடியாக இருப்பதால் பகல் பொழுது கிட்டத்தட்ட 14 மணிநேரம் நீட்டிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஜூன் 21 ஆம் தேதி அன்று சூரிய பகவான் கடக ரேகை செல்லும் பகுதியில் சூரியனின் கதிர்கள் நேராக விழும்.
இதனால் பகல் மிகவும் நீளமாகவும் இரவு மிகக் குறைவாகவும் இருக்கிறது. மேலும், மதிய நேரத்தில் சூரிய பகவான் கிட்டத்தட்ட தலைக்கு மேல் இருப்பதால் நிழல்கள் சிறிது நேரம் இல்லாமல் போகலாம்.

இந்த தினத்திற்கு பிறகு பகல் பொழுது படிப்படியாக நீளமாகி இரவுகள் குறைய துவங்கும். இந்து மதத்தின் அடிப்படையில் சூரிய உத்திராயணத்தில் இருந்து தட்சிணாயத்திற்கு இடம் மாறுகிறார். மேலும், இந்து மதத்தில் தட்சிணாயனத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
இந்த காலங்களை நாம் செய்யக்கூடிய தர்மங்களும் மத சடங்குகளும் ஒரு சிறப்பான ஆன்மீக பலன்களை தரக்கூடியதாக இருக்கிறது. இந்த செய்யும் தர்மம் நமக்கு இரட்டிப்பு புண்ணியம் கொடுக்கும். ஆதலால், ஜூன் 21 ஆம் தேதி அன்று ஒரு சில மங்களகரமான காரியங்களை செய்யும்போது நம் வாழ்க்கை வளமாக மாறுகிறது.

அதனால், இந்த நாளில் காலையில் எழுந்து குளித்து ஒரு செம்பு பாத்திரத்தில் நீர், குங்குமம், அட்சதை, சிவப்பு பூக்கள் சேர்த்து சூரிய பகவானுக்கு நீர் தானம் செய்ய வேண்டும். ஏழை எளியவர்களுக்கு எள், குடை, காலணிகள் தானம் வழங்கலாம்.
அதே போல், இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது நமக்கு சிறந்த பலன்களை பெற்றுக் கொடுக்கும், முடிந்தவரை அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். அந்த நாளில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதையும் தவிர்த்தால் நன்மை கொடுக்கும்.
யாரையும் அவமதிக்க வேண்டாம். தேவையில்லாத கோபம் கடும் சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசிய.ம் நேர்மறையான அணுகுமுறையை கையாள வேண்டும். இவ்வாறு செய்கின்ற பொழுது நிச்சயம் நல்ல பலன் பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |