சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஒரு வழிபாடு செய்ய தவறாதீர்கள்.. என்ன தெரியுமா?
நம்முடைய இந்து மதத்தில் சித்தர்கள் வழிபாடு என்பது எல்லோராலும் விரும்பி பின்பற்றக் கூடிய ஒரு வழிபாடாக இருக்கிறது. காரணம் கெட்ட நேரத்தால் சூழ்ந்திருக்கும் பொழுது இறைவன் கூட நம்மை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை வந்துவிடும்.
அந்த நேரத்தில் நம் சித்தர்களை வழிபாடு செய்யும்பொழுது அவர்கள் அந்த கெட்ட நேரத்தை குறைத்து நல்ல நேரமாக மாற்றக்கூடிய ஆற்றல் சித்தருக்கு உண்டு என்று பலரும் சித்தர்கள் ஜீவ சமாதியை தேடி வழிபாடு செய்வது வழக்கம்.
மேலும், சித்தர்கள் வழிபாடு நாம் செய்ய தொடங்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றமும் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய மறைமுக தோஷமும் விலகும் என்பதும் நம்பிக்கை.

அப்படியாக, நீங்கள் சித்தர் வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் சித்தர்களுடைய அருள் ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் கட்டாயமாக சித்ரா பௌர்ணமி நாளில் சித்தர்களுடைய ஜீவ சமாதிகள் மற்றும் சித்தர் நடமாட்டம் இருக்கக்கூடிய மலை கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும். அதைப் பற்றி பார்ப்போம்.
பொதுவாக, சித்ரா பௌர்ணமி என்பது ஆதி காலங்களில் சித்தர் பௌர்ணமி என்றே அழைக்கப்பட்து. பிறகு அது மருவி சித்ரா பௌர்ணமி என்று பெயர் மாறியது. இந்த சித்ரா பௌர்ணமி அன்று சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து இந்த பூமிக்கு வருவதாக கோரக்கர் அவருடைய "மலை வாடகம்" என்கின்ற நூலில் சொல்லியிருக்கிறார்.
சித்ரா பௌர்ணமி அன்று இரவில் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. இவை பயிர், செடி, கொடி, மூலிகைகள் இவையெல்லாம் செழிப்பாக வளர்வதற்கு தேவையான ஆற்றலை கொடுக்க கூடியது.
ஆதலால் நிலவொளி நம் மீது பட்டால் நம்முடைய அறிவு மேம்படும். மனதில் இருக்கக்கூடிய குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். அதனால்தான் மற்ற நாட்களை விட தெய்வீக ஆற்றல் மிக்க மலைகளுக்கு சித்ரா பௌர்ணமி சக்தி அதிகரிக்கிறது.

சித்ரா பவுர்ணமியில் என்ன செய்ய வேண்டும்?
தஞ்சை பெரிய கோவிலில் சித்ரா பௌர்ணமி விழாவை "சித்தர் பெருவிழா" என எடுத்து நடத்துவார்கள். இந்த நாளில் நந்தி சிவன் கருவூராருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்களுக்கு அன்னதானமும் நடத்துவார்கள்.
இந்த நிகழ்வில் பங்கேற்றால் கருவூரார் சித்தரின் முழு அருளையும் பெறலாம் என்பது நம்பிக்கை. சித்தர்கள் வாழ்ந்த காலங்களில் நமக்கு அறிவுறுத்திய முக்கியமான அறிவுரை ஏழை எளியவர்களுக்கு பசியை போக்க அன்னதானம் செய்யுங்கள் என்பதே ஆகும்.
எனவே முடிந்தால் சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்யுங்கள் அல்லது அன்னதானம் நடக்கின்ற இடங்களுக்கு சென்று உங்களால் முடிந்த உதவியை கொடுங்கள். இதனை கருத்தில் கொண்டு தான் 24 மணி நேரமும் இலங்கையில் சித்தர்கள் வாசம் செய்யும் வேலோடு மலைகள் திருப்பணி செம்மல் தியாகராஜா சந்திரா குடும்பத்தினர் எப்பொழுதும் யார் வந்தாலும் அன்னதானத்தை விடாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தர் ஜீவ சமாதிகள் வழிபாடு :
சித்ரா பௌர்ணமி அன்று ஆலயங்களில் மட்டுமல்லாமல் ஜீவசமாதிகளிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும். அதனால் உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு சித்தர் ஜீவசமாதிக்கு சென்று வழிபாடு செய்து உங்களுடைய வேண்டுதலை வைத்தால் கட்டாயம் அந்த வேண்டுதல் 48 நாட்களில் நடக்கும் என்பது எந்த ஒரு மாற்றவும் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |