கஷ்டங்கள் நீங்க தேங்காய் உடைத்து வழிபாடு செய்யுங்கள்
நம்முடைய வழிபாட்டில் எத்தனையோ காய்கறிகள் இருந்தாலும் நாம் இறைவனுக்கு படைத்து வழிபடும் ஒரு முக்கியமான ஒன்றாக தேங்காய் உள்ளது.நாம் குலதெய்வ கோயிலுக்கோ அல்லது இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்ய செல்லும் பொழுது மாலையுடன் சேர்த்து தேங்காய் தான் வாங்கி செல்வோம்.
இதற்கு காரணம் நம் வேண்டும் காரியங்களும் செய்யும் செயல்களும் தேங்காமல் நடைபெற தேங்காய் படைத்து வழிபாடு செய்கின்றோம் என்று சொல்கிறார்கள்.
இவ்வளவு ஏன் தெய்வங்கள் மக்களுக்கு தரிசனம் கொடுக்க வீதி உள்ள வந்து திரும்பவும் கோயிலுக்குள் செல்லும் பொழுது தேங்காய் கொண்டு தெய்வத்தை சுற்றி அந்த தேங்காயை வீதியில் உடைத்த பின் தான் கோயிலுக்குள் எடுத்து செல்வார்கள்.
அவ்வாறு செய்வதால் கண்திருஷ்டி எல்லாம் உடைந்து விடும் என்பதற்காக தான்.மேலும் தேங்காய் மூன்று கண்கள் கொண்டதாக இருப்பதால் தான், இதனை முக்கண்ணனின் அம்சம் என்கிறார்கள். சிதறுகாய் உடைத்தால் துன்பங்கள் சிதறி ஓடும் என்பது நம்பிக்கை.
சிலர் தங்களுடைய துன்பம் விலகினால் கோயிலுக்கு 108 தேங்காய் உடைப்பதாக எல்லாம் வேண்டிக்கொள்வார்கள்.ஆதலால் நமக்கும் ஏதேனும் துன்பம் ஏற்படாமல் இருக்க தேங்காய் உடைத்து பரிகாரம் செய்தால் நம்மை நோக்கி வரும் துன்பம் எல்லாம் முழுவதுமாக உடைந்து விடும் என்று நம்பப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |