திருமணம் ஆன பெண்கள் மறந்தும் அணியக்கூடாத அணிகலன்கள்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் திருமணம் ஆன பெண்கள் சில முக்கியான விஷயங்களை பின்பற்றுவதால் அவர்களுடைய குடும்பத்தில் சந்தோசம் நிலவும் என்று நம்பப்படுகிறது.அதாவது கால்களில் தவறாமல் மெட்டி அணிவது நெற்றியில் குங்குமம் வைப்பது என்று சில விஷயங்களை கடைபிடித்தால் அவர்களுக்கு லட்சுமி கடாக்ஷம் உண்டாகும் என்று சொல்கிறார்கள்.
அதே போல் கட்டாயம் பெண்கள் அவர்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய சில அணிகலன்கள் அணியக்கூடாது என்றும் சொல்கிறார்கள்.அதை பற்றி பார்ப்போம். பொதுவாக திருமணம் ஆன பெண்கள் கட்டாயம் கைகளில் வளையல் அணியவேண்டும்.
அப்படியாக அவர்கள் தங்கம் மற்றும் பிற நிற வளையல்கள் அணிந்தாலும் அவர்கள் ஒரு பொழுதும் கருப்பு நிற வளையலை அணியக்கூடாது.அவ்வாறு அணியும் பொழுது கணவன் மனைவி இடையே சண்டைகள் வரலாம்.குழந்தைகள் உடல்நலனில் தொந்தரவு உண்டாகும்.
மேலும் சனி தோஷம் பிடிக்கும். அதே போல் சாஸ்திர ரீதியாக தங்கம் மகாலக்ஷ்மியின் அம்சமாகவும், வெள்ளி சந்திர பகவானின் அம்சமாகவும் கருதப்படுகிறதுஅதனால் எப்பொழுதும் திருமணமான பெண்கள் தங்கத்தை இடுப்பிற்கு மேலேதான் அணிய வேண்டும்.
வெள்ளியை இடுப்பிற்குக் கீழேதான் அணிய வேண்டும். தங்கம் என்பது உடலுக்கு சூட்டையும், வெள்ளி உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். பெண்கள் காலில் தங்கக் கொலுசோ அல்லது தங்க மெட்டியோ அணியக் கூடாது. இது மகாலக்ஷ்மியை அவமானப்படுத்தும் செயலாகக் கருதப்படுகிறது.
இதனால் அவர்கள் குடும்பத்தில் திடீர் ஆரோக்கிய பிரச்சனை நிதி நெருக்கடிகள் உருவாகக்கூடும். அதே போல் பெண்கள் ஒருபோதும் முழுவதும் வெள்ளை நிறத்தில் இருக்கும் சேலையை அணியக் கூடாது.இதனால் குடும்பத்தில் தேவை இல்லாத குழப்பம் எதிர்மறை ஆற்றல் உருவாகும்.
மேலும் பெண்கள் வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் கடுகு அளவாது நெற்றியில் பொட்டு வைத்து செல்ல வேண்டும்.அவ்வாறு பொட்டு வைப்பது அவர்களை எதிர்மறை ஆற்றலில் இருந்து காப்பாற்றும்.அதே போல் பெண்கள் அணியும் மாங்கல்யத்தில் இரும்பு பொருளை சேர்க்கக் கூடாது.
சில பெண்கள் தாலியுடன் Safety pinsஐ அணிந்திருப்பார்கள். இதனால் சனி தோஷம் ஏற்பட்டு கணவன் ஆயுள் குறையும், குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.இவ்வாறான சிறு சிறு விஷயங்களை தவிர்த்து வந்தால் போதும் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |