வீடுகளில் மீன் தொட்டி வைப்பதனால் கிடைக்கும் அற்புதமான வாஸ்து நன்மைகள்
ஜோதிடத்தில் பொருத்தவரை வாஸ்து என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. வாஸ்துவும் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை கொடுக்கிறது என்று சொல்லலாம். அப்படியாக வாஸ்துரீதியாக நம் வீடுகளில் பல விஷயங்களை பின்பற்றுவோம்.
அதாவது சில பொருட்களை நம் வீடுகளில் வைக்கும் பொழுது வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் அவை குறைத்துக் கொடுக்கிறது. அந்த வகையில் வீடுகளில் மீன் தொட்டி வளர்ப்பது என்பது இயல்புதான். ஆனால் மீன் தொட்டி வளர்பதற்கு பின்னால் இருக்கும் முக்கிய வாஸ்து குறிப்புகள் நம்மை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது.
அதாவது வீடுகளில் மீன் வளர்க்கும் பொழுது அவை நம் வாஸ்து ரீதியாக ஏற்படும் பாதிப்புகளிலிருந்து முற்றிலுமாக காக்கிறது என்று சொல்கிறார்கள்.
பொதுவாக நாம் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது மீன் தொட்டி அருகே நின்று நீந்தும் மீன்களை பார்க்கும் பொழுது மன அழுத்தம் குறைவதை நாம் காணலாம். அதோடு மீன்கள் வளர்க்கும் பொழுது குடும்பத்தில் உள்ள அனைவருடைய மனதையும் அவை சமநிலை செய்கிறது.
எதிர்மறை தாக்கங்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் வீடுகளில் மீன் வளர்ப்பது தாண்டி மீன் தொட்டியை சரியான இடத்தில் வைப்பது அவசியமாகும். நாம் வீடுகளில் மீன் தொட்டியை சரியான திசையில் வைத்து வளர்க்கும் பொழுது நம் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வருகிறது.
அப்படியாக வீடுகளில் மின் தொட்டியை வடக்கு, வடக்கிழக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கும் பொழுது மிகவும் மங்களகரமானதாகவும் நேர்மறை ஆற்றலை கொடுக்கக் கூடிய விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. அதே போல் மீன் தொட்டியில் தண்ணீர் எப்பொழுதும் சுத்தமாக இருப்பது அவசியமாகும்.
அதோடு மீன் தொட்டியில் சில எண்ணிக்கைகள் கொண்டு வளர்க்கும் பொழுது அவை நமக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கிறது. அதாவது 9 மீன்கள் ஒரு தொட்டியில் இருந்து வளர்க்கும் பொழுது அவை மங்களகரமானதாகவும் அதில் எட்டு தங்கமீன்கள் ஒரு கருப்பு மீண்டும் இருப்பது மிகவும் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
மேலும், நம் குடும்பங்களில் ஏதேனும் தவிர்க்க முடியாத கஷ்டங்கள் வருகிறது என்றால் அந்த கஷ்டங்களை அந்த மீன்கள் தாங்கிக் கொள்வதை நாம் கவனிக்கலாம். அதனால் மீன் வளர்ப்பது நம் குடும்பத்தை மிகச் சிறந்த ஒரு பாதுகாப்பு நிலையில் வைக்கிறது என்பது மாற்றமில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







