ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்கள் இருந்தாலும் ராகு கேது என்பது நிழல் கிரகமாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த ராகு எந்த கிரகங்களுடன் இணைந்து இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் பலன்கள் மாறுபடுகிறது. அதே சமயம் ராகு அமர்ந்திருக்கும் வீட்டை பொருத்தும் ராகு இணைந்த பலனை பெறுகின்றோம். அந்த வகையில் ஜாதகத்தில் திருமண வாழ்க்கையை குறிக்கின்ற 7ஆம் வீட்டில் ராகு அமர்ந்திருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
ஒரு மனிதனுடைய திருமண வாழ்க்கை குறிக்கும் இடம் தான் இந்த ஏழாம் இடம். ஒருவரின் வாழ்க்கை துணையை பற்றியும் வாழ்க்கையில் நிலை தன்மையை பற்றியும் குறிக்கக்கூடிய ஒரு முக்கியமான இடமாகும். அந்த வகையில் எட்டாம் இடத்தில் ராகு அமர்ந்திருந்தால் அவர்கள் திருமண வாழ்க்கையில் சில அவமானங்களை சந்திக்க நேரும்.
ஏழாம் இடத்தில் ராகு இருந்தால் இவர்கள் சந்திக்கும் வாழ்க்கை துணையால் இவர்கள் அதீதமான காதலும் அன்பும் வாழ்கையில் மறக்க முடியாத நினைவுகளும் பெறுவார்கள். ராகு ஏழாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் ஒரு சில சங்கடங்கள் கடந்து வாழ்க்கை இனிமையாகுவதை காணலாம்.
அதே சமயம் ஏழாம் இடத்தில் ராகு இருக்கும் பொழுது அவர்களுக்கு சொந்த ஊர் அல்லாது வெளிநாடு, வெளி மாநிலம் அல்லது வேறு மொழி பேசும் வாழ்க்கை துணை அல்லது வேற்று மதத்தினரை கூட அவர்கள் திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகிறது. ஏழாம் இடத்தில் ராகு அமர்ந்திருப்பவர்கள் திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் முற்றிலுமாக அவர்களை மாற்றிக் கொள்ளும் நிலை உருவாகும்.
பொதுவாக ஏழாம் இடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் அவர்களுக்கு பல அவமானங்களை அவர்கள் வாழ்க்கை துணையிடம் சந்தித்த பிறகு ஒரு நிலையான திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். இதற்கு பரிகாரம் என்று பார்த்தால் இறை வழிபாடு மட்டுமே இறைவழிபாடு இவர்கள் தொடர்ந்து செய்ய அவர்கள் வாழ்க்கையில் நிலையான வாழ்க்கை துணை பெறலாம் அதோடு சந்திக்கும் அவமானங்களின் தாக்கங்களும் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







