குழந்தையின் முதல் முடிகாணிக்கை யாருக்கு கொடுக்க வேண்டும்?
குலம் காக்கும் தெய்வம் குலதெய்வம்.ஏனென்றால் நம்முடைய முன்னோர்களை காப்பாற்றிய குலதெய்வம் நம்மையும் நம் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றும்.நமக்கு ஏதேனும் தொந்தரவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் நாம் கண்ணை மூடி குலதெய்வத்தை சரணடைந்தால் போதும்.அவர் எல்லாவற்றையும் சரி செய்து விடுவார்.
பெரும்பாலாக மக்கள் அவர்கள் குல தெய்வத்தை வெளியூரில் இருப்பதால் மறந்து விடுவார்கள்.ஆனால் அவ்வாறு செய்யாமல் எங்கு இருந்தாலும் மனதில் நிச்சயம் நாம் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யவேண்டும்.
சில நேரங்களில் தாங்கி கொள்ளவே முடியாத துன்பம் வந்து நம்மை வாட்டி வதைக்கும்.அப்பொழுது எதையும் பற்றி சிந்திக்காமல் நாம் குலதெய்வம் கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்ற வழிபாடு செய்ய விரைவில் அதற்கான பலன் கிடைக்கும்.
அடுத்தபடியாக நாம் குழந்தைகளுக்கு மொட்டை போடும் பழக்கம் வைத்திருக்கிறோம்.அந்த வகையில் என்னதான் நாம் பல வேண்டுதல் வைத்தாலும் பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் நாம் குலதெய்வம் கோயிலில் தான் முடிகாணிக்கை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்ய குலதெய்வத்தின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் நம்முடைய குல தெய்வத்திற்கு ஈடாகாது.
ஆக தினமும் வேலைக்கு அல்லது ஏதேனும் காரியமாக வெளியில் செல்லும் பொழுதும் குலதெய்வத்தை மனதார நினைத்து விபூதி குங்குமம் வைத்து செல்ல நிச்சயம் சென்ற காரியத்தில் வெற்றியும் மங்களம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |