குல தெய்வ கோயில் மண்ணை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா?
நம்முடைய குடும்பத்தை பல இன்னல்களில் இருந்து காத்தருளும் தெய்வம் தான் குலதெய்வம். அதனால், கட்டாயம் நாம் வருடம் ஒருமுறை அல்லது ஆறுமாதம் ஒரு முறை குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நம்முடைய குடும்ப வளர்ச்சியை மேம்படுத்தும்.
அதோடு, வாழ்க்கையில் தீர்க்க முடியாத துன்பம், குடும்பத்தில் தொடர் தடைகள், பொருளாதார நஷ்டம் சந்திப்பவர்கள் கட்டாயம் அவர்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லாம் பிரச்சனைகளும் நல்ல முடிவை பெரும்.
மேலும், சிலர் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வரும் பொழுது அங்கு இருந்து மண்ணை எடுத்து வரும் பழக்கம் வைத்து இருப்பார்கள். அப்படியாக, குலதெய்வம் கோயிலுக்கு சென்று மண்ணை எடுத்து வந்து வீட்டில் வைத்து வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.
சிலரது வீட்டில் திடீர் என்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு பல தொந்தரவுகளை கொடுத்துவிடும். எவ்வளவு தான் வைத்தியம் பார்த்தும் உடல் நிலையில் முன்னேற்றம் இருக்காது.
அதே போல், கணவன் மனைவி இடையே காரணமே இல்லாமல் தொடர் பிரச்சனைகளை சந்திக்கநேரிடும். அவர்கள் கட்டாயம் குலதெய்வம் கோயிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வந்து படுக்கையறையில் வைத்து வழிபாடு செய்வது அவர்களுக்கு நல்ல மன அமைதியை கொடுக்கும்.
அதே போல், வீட்டில் தீராத கண் திருஷ்டியால் அவதி படுபவர்கள் குலதெய்வம் கோயிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து நிலைவாசல்படியில் கட்டி வைக்கலாம். குலதெய்வம் கோவிலில் இருந்து எடுத்து வந்த மண்ணிற்கு வாரத்தில் வெள்ளி, செவ்வாய் நாட்களில் ஆராதனை காட்ட வேண்டும்.
இந்த மண்ணை வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் பொழுது நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகுவதோடு வீட்டில் உள்ள கண் திருஷ்டி பாதிப்புகள் விலகும். மிக் முக்கியமாக, குலதெய்வம் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணிற்கு களங்கம் ஏற்படுவது போன்ற செயல்கள் எதுவும் செய்யாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
மேலும், நாம் எந்த காரணத்திற்காக குலதெய்வம் கோயிலில் இருந்து மண் எடுத்து வந்து வழிபாடு செய்கின்றோமோ, அந்த பிரச்சனை முடிந்த பிறகு குலதெய்வம் கோவில் மண்ணை எடுத்த இடத்திலோ அல்லது ஏதேனும் நீர்நிலைகளிலோ கலந்து விடுவது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |