அட்சய திருதியை அன்று அதிர்ஷ்டம் பெற பல்லி தரிசனம் செய்யுங்கள்
இந்து மதத்தில் அட்சய திருதியை என்பது முக்கியமான சுப பண்டிகை ஆகும். அன்றைய தினத்தில் எந்த ஒரு காரியம் செய்தாலும், அவை இரட்டிப்பு பலன் கொடுக்கும். மேலும், அட்சய திருதியை அன்று நாம் இந்த ஒரு விஷயத்தை பார்த்தால் பல நன்மைகள் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
நம் வீடுகளில் பல்லி நடமாடுவது இயல்பான விஷயம். மேலும், நம்முடைய இந்து மதத்தில் பல்லி விஷேசமான ஜீவராசியாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, அட்சய திருதியை அன்று வீடுகளில் எப்படியாது பல்லியை பார்ப்பது மிக சிறந்த அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் அன்றைய தினம் பல்லியை பார்த்தால் ஏழு ஜென்ம பாவம் விலகி அதிர்ஷ்டம் உண்டாகிறது. சித்திரை மாத வளர்பிறை திதியை தான் அட்சய திருதியையாக நாம் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் வாஸ்து பகவான் பல்லிகளுக்கு ஒரு கட்டளை அளித்து விட்டார்.
அதாவது, இந்த நாளில் மனிதர்கள் கண்களில் பல்லி தென்படக்கூடாது என்று கட்டளை அளித்துள்ளதால் அன்றைய தினம் கண்ணனுக்கு தெரியாமல் ஓர் இடத்தில் பல்லிகள் ஒளிந்து கொள்கிறது.
இவை எல்லாம் தாண்டி நம் கண்களுக்கு பல்லி தென்பட்டால் அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் அவர்களின் ஏழு ஜென்ம பாவமும் விலகும் என்று சொல்லப்படுகிறது.
அதனால், அந்த நாள் பல்லி நம் கண்களுக்கு தென்பட வேண்டும் என்று அந்த வாஸ்து பகவானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அதனால், நாளை பல்லி கண்களுக்கு தரிசனம் கொடுத்தால் தலை வணங்கி ஒரு நமஸ்காரம் செய்வது நமக்கு அதிர்ஷ்டத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |