இறைவனை அடைய ஒரே வழி-தியானம்
வாழும் இந்த மாயை உலகில் ஒரே உண்மை இறைவன்.இறைவன் அவன் தான் எல்லாமும்.அவனை சரண் அடைந்தால் மனமும் உடலும் லேசாகும்.மனிதன் எதற்காக ஓடுகின்றோம் என்று தெரியமால் தினம் அவன் காலையில் எழுந்து அவனை ஊக்குவித்து கொண்டு குடும்பத்தை கவனிக்க அவனை மேம்படுத்த வேலைக்கு சென்று அவன் கடமை ஆற்றுகின்றான்.
உண்மையில் மனிதன் ஆனவன் இதை செய்யவேண்டும்.இது அவனுடைய கடமை.எந்த மனிதன் தன்னுடைய கடமையை சரியாக செய்கிறானோ அவனுக்கு துன்பம் நேருவது இல்லை.ஆனால் கடமையை செய்து தன்னை மறந்து,அடைய வேண்டிய ஞானத்தை அடையாமல் வாழ்வதும் தவறு.
அப்படியாக ஒரு மனிதன் தெளிந்த சிந்தனையோடு வாழ இறைவனை மனதார வழிபட்டு மந்திரங்கள் சொல்லுவதை காட்டிலும் அவன் தியானம் மேற்கொண்டால் அதன் வழியாக முதலில் மனிதன் அவன் அவனை தெரிந்து கொள்கின்றான்.பின் அந்த தெளிவினால் கடவுளை அடைகின்றான்.
தியானம் என்பது ஒரு மனிதனின் மன கதவை திறக்கும் சாவி.அவன் எண்ண ஓட்டங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒரு முக்கிய கருவி. மனிதன் மனம் திறந்து அவனுடைய எண்ணங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் பொழுது அவன் உண்மையின் தத்துவமும் வாழ்தலின் உண்மை நோக்கமும் புரிந்துகொள்கின்றான்.
இதற்கு அவனுக்கு முதலில் அமைதி தேவை. அந்த அமைதிக்கு அவசியம் தியானம் தேவை.மனம் ஆனது சிறிது நேரம் ஓர் இடத்தில் அமர்ந்து கண்களை முடி ஓடும் எண்ண ஓட்டங்களை ஒரு நிலை படுத்த தெரிந்து கொண்டால் அவன் அவனையே வெல்கிறான்.
அதனால் அவன் இறைவனை அடைகின்றான்.துடிக்கும் உயிர் ஓர் நாள் அமைதி ஆகும்.அந்த நாள் கட்டாயம் எல்லா உயிர்களுக்கும் உண்டு.இதை முதலில் மனதில் ஏற்றி கொண்டு எதற்கும் மனம் குழம்பாமல் மன அமைதியோடு எல்லாம் உணர வாழ்க்கை அழகாகும்.
அந்த அழகான உணருதலுக்கு கட்டாயம் தியானம் அவசியம்.தியானம் செய்வதால் நாம் பிறவி பலனை அறியலாம்.தியானத்தால் எதையும் சாதிக்கலாம்.பக்திக்கும் ஆன்மாவுக்கும் ஒரே வழி தியானம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |