5 ஆண்டுகள் சிவாலயம் சென்ற பலன்களை கொடுக்கும் மகா சனிப்பிரதோஷம் வழிபாடு
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த தினமாக பிரதோஷம் கருதப்படுகிறது.அன்றைய தினத்தில் சிவபெருமானை மனதில் நிறுத்தி விரதம் மேற்கொண்டால் நம்முடைய கர்மவினைகள் குறையும்.அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தை மகா சனிப்பிரதோஷம் என்று சொல்கின்றோம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நாளில் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நமக்கு சனி பகவானால் உண்டாகும் பாதிப்புகள் குறையும். மேலும் ஒருவர் சனி பிரதோஷம் அன்று விரதம் இருந்து சிவபெருமான் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் அவர்கள் 5 ஆண்டுகள் தொடர்ந்து சிவ ஆலயம் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
அன்றைய தினத்தில் அதிகாலை குளித்து,எம்பெருமானை நினைத்து நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு மனதார சிவ மந்திரம் சொல்லி விரதம் மேற்கொண்டால் சிவன் அருளால் நம் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை பார்க்க முடியும்.
விரதம் இருப்பவர்கள் பகல் முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.முக்கியமாக மாலை வேளையில் அருகில் உள்ள சிவாலயம் அல்லது மனதிற்கு பிடித்த சிவன் கோயிலுக்கு வழிபாடு செய்வது முக்கியமான ஒன்று.
ஆலயம் செல்லும் பொழுது சிவபெருமானுக்கு பிடித்த வில்வ மாலை அல்லது நம்மால் முடிந்த பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுக்கலாம்.இவ்வாறு செய்வதால் மனம் தூய்மை அடையும்.மனம் தூய்மை அடைந்தால் போதும் நமக்கு நடக்கவேண்டிய விஷயங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |