இறந்தவர்களின் தாலியை தவறியும் இப்படி பயன்படுத்தாதீர்கள்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஒரு திருமணத்தில் தாலி முக்கிய அங்கமாக திகழ்கிறது.இந்த தாலியானது ஒரு ஆண் பெண்ணிற்கான உறவுமுறையை உறுதிப்படுத்தவும்,அவர்களின் பந்தத்தை உணர்வு பூர்வமாக இணைக்கவும் உதவுகிறது.
அதனால் தான் பெண்கள் தாலிக்கு எப்பொழுதும் தனி மரியாதை கொடுத்து பாதுகாத்து வருவார்கள்.அதே போல்,கோயிலுக்குசென்றாலும்,வீடுகளில் பூஜை செய்யும் பொழுதும்,தன் கணவனின் உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தின் ஒற்றுமைக்காக கடவுளிடம் வழிபாடு செய்து தாலியில் பெண்கள் குங்குமம் வைத்து கொள்வார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தாலியை அணிந்த பெண் திடீர் மரணம் அடைந்தால் அந்த தாலியை என்ன செய்வது என்று பார்ப்போம். தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் ஆன பெண்கள் கழுத்தில் நிச்சயம் எப்பொழுதும் தாலி அணிந்து இருக்கவேண்டும்.அதை கழட்டி வைப்பது என்பது செய்யக்கூடாத காரியமாக பார்க்கப்படுகிறது.
மேலும்,திருமாங்கல்யத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்.ஆதலால் நாம் அதற்கு தனி மரியாதை கொடுத்து கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும்.அந்த காலத்தில் தாழை பனை மரத்தில் தாலி செய்து போட்டுக் கொண்டனர்.
இதனால்தான் இதற்கு தாலி என பெயர் வந்ததாக சிலர் சொல்கின்றனர். ஆதி காலத்தில் ஒரு மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை வைத்தும் தாலி கட்டும் வழக்கம் இருந்தது.காலம் கடந்து செல்ல அது ஒவ்வொருவரின் வழக்கத்தின் அடையாளமாக மாறி அவர்களுக்கு ஏற்றார் போல் போடப்படுகிறது.
பொதுவாக,மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்தால் அதற்கு தினமும் மஞ்சள் பூசி குளிக்க வேண்டும்.இல்லையென்றால் தாலியின் மஞ்சள் நிறம் மங்கி காணப்படும்.ஆதலால் இதை பலராலும் பின்பற்ற முடியாமல் தங்க செயினில் தாலி செய்து போட தொடங்கினர்.
அதே போல்,தாலி அணிந்து கொண்டிருந்த பெண் இறந்துவிட்டால் அந்த தாலி யாருக்கு சொந்தம் என்பது குறித்து நமக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இறந்து போன பெண்ணின் தாலி என்பது அவருடைய மகள் இருக்கும் போது அந்த தாலி மகளுக்குத்தான் சேர வேண்டும்.
ஒரு வேளை இறந்தவருக்கு மகளே இல்லாவிட்டால் மகனுக்கு போய் அது மருமகளுக்கு போய் சேர வேண்டும்.அந்த தாலியை மீண்டும் பயன் படுத்த கூடாது.இறந்தவரின் திருமாங்கல்யத்தில் உள்ள தங்கத்தை உருக்கி அதை வேறு விதமாக , அதாவது வேறு நகையாக செய்து கொள்ளலாம்.
இல்லாவிட்டால் புதிதாக திருமாங்கல்யம் செய்யும் போது கூட அந்த தங்கத்துடன் இந்த தங்கத்தை உருக்கி கலந்து கொள்ளலாம்.அவ்வாறு பித்ருவான இறந்தவரின் தாலியை வேறு ஒரு ஆபரணமாக அணியும் போது அவர்களுடைய பரிபூரண அருளும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |