முருகப்பெருமானின் அருள் நமக்கு எப்பொழுது கிடைக்கும்?
நாம் மனிதர்களாக பிறந்து நம்முடைய இலக்குகளை நோக்கி ஓடினாலும் இறுதியில் நாம் சென்றடையும் இடம் இறைவனின் திருவடிகள் தான். அந்த வகையில் கலியுக வரதனாக அனைவராலும் போற்றி வழிபாடு செய்யக்கூடிய முருகப்பெருமான் பலருக்கும் பல வேளையில் பல அதிசயங்களை நிகழ்ந்திருக்கிறார்.
முருகப்பெருமானை சரண் அடைந்து தொடர்ந்து வழிபாடு செய்தவர்கள் அவருடைய அதிசயத்தையும் அவர் கொடுக்கக்கூடிய இன்னல்கள் கடந்து வரக்கூடிய ஆனந்தத்தையும் அறிந்திருப்பார்கள்.
அந்த வகையில் முருக பக்தரான ஜே.எஸ் கோபி அவர்களுக்கு அருணகிரி நாதர் எழுதிய திருப்புகழ் ஓலைச்சுவடியை நேரடியாக தொட்டுப் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.
அவருக்கு அந்த வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது? அந்த ஓலைச்சுவடியை அவர் தொடும்பொழுது அவர் உணர்ந்த விஷயங்கள் என்ன? என்று பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அதைப்பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து நாம் தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







