வீட்டில் தெய்விக ஆற்றல் பெறுக நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்கள்
வீடு என்பது நேர்மறை எண்ணங்கள் கொண்டு நிரம்பி இருக்கவேண்டும்.அப்பொழுது தான் லட்சுமி தேவியின் முழுமையான அருளை பெற முடியும்.ஆனால் சிலர் வீட்டில் என்னதான் சுத்தமாக இருந்து சுவாமிக்கு பூஜைகள் செய்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தாலும் அவர்களுக்கு தொடர்ந்து கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.
அப்படியானவர்கள் வீட்டில் ஒரு சில விஷயத்தை மாற்றி அமைத்தால் போதும் லட்சுமி தேவி வீடு தேடி வருவாள்.அப்படியாக நாம் இப்பொழுது வீட்டில் லட்சுமி தேவியின் அருளை பெற பின் பற்ற வேண்டிய சில முக்கியமான ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
1)வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
2) பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
3) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி அதை மும்முறை வலம் வர வேண்டும்.இதனால் மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருளை நம்மால் பெற முடியும்.
4) ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தால் கோடி புண்ணியம் தேடி வரும்.ஆதலால் பசுவிற்கு உணவு வழங்குதல் கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
6)தினசரி விளக்கேற்றுவது வீட்டிற்கு நல்ல ஆற்றலை பெற்று தரும்.அதிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
7) வீட்டுக்கு வரும் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
8) பெண்கள் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.
9) அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
10) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |