வாஸ்து: சமையலறையில் இந்த 5 பொருட்கள் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்
ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாகும். இந்த வாஸ்து என்பது நம்முடைய முன் வாசல் தொடங்கி பின் வாசல் வரையிலும் நாம் சரியாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.
அந்த வகையில் நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய சமையலறையிலும் நாம் வாஸ்துவை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். காரணம் நாம் வீடுகளில் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு சமையல் அறை வாஸ்துவும் ஒரு காரணமாக உள்ளது. அப்படியாக வாஸ்து ரீதியாக நாம் சமையல் அறையில் பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

1.பழைய சமயல் எண்ணெய்:
நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் மிகவும் பழையதாக இருக்கின்ற நேரத்தில் அதை உடனடியாக அகற்றி விட வேண்டும். காரணம் அது நமக்கு ஆரோக்கிய ரீதியாக சில குறைபாடுகளை கொடுத்தாலும் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் நிறைய எதிர்மறை ஆற்றலை உண்டாகக்கூடும். ஆதலால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்.
2. உடைந்த பாத்திரங்கள்:
சில நேரங்களில் நம்மை அறியாமல் பாத்திரத்தில் சமைக்கும் பொழுது அதிகளவிலாக அடி பிடித்து விடும். அந்த பாத்திரமானது ஒரு கருமை நிறத்தில் காணப்படும். ஆக அவ்வாறான பாத்திரத்தைநாம் உடனடியாக சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். சுத்தமே செய்ய முடியாத அளவிற்கு அந்த பாத்திரம் இருக்கும் பொழுது அதை உடனடியாக அகற்றி விட வேண்டும். அதேபோல் எவ்வளவு அழகான பாத்திரம் ஆக இருந்தாலும் அது உடைந்த நிலையில் இருக்கும் போது அதனையும் நம் அகற்றுவதுதான் நன்மை தரும்.
3. காலாவதியான பொருட்கள்:
சில பொருட்கள் சமையலுக்காக வாங்கி இருக்கின்ற வேளையில் அதை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்திருக்கலாம். ஆக காலாவதியான தேதியில் இருக்கின்ற நேரத்தில் அதையும் உடனடியாக அகற்றி விட வேண்டும்.
அதேபோல் மருந்து மாத்திரைகளும் காலாவதியாகி இருந்தால் அகற்றுவது நல்லது. காரணம் நீண்ட நாள் ஆன சமையல் பொருட்கள் வீடுகளில் இருக்கும் பொழுது அதில் வண்டு வரத் தொடங்கும். அவ்வாறு வருகின்ற வண்டு நமக்கு ஒரு மிகப்பெரிய தீய சக்திகளையும் ஆற்றலையும் கொடுக்கக் கூடும்.

4. பழைய பேப்பர்கள்:
நம் வீடுகளில் தினசரி செய்தித்தாள்கள் வாங்கி வாசிப்பதுண்டு. அவ்வாறு வாசிக்கின்ற செய்தித்தாள்களை அவ்வப்போது கழித்துக் விடுவது நல்லது. காரணம் பழைய என்று ஒரு விஷயம் வீடுகளில் தேங்க தேங்க அது நமக்கு ஒரு நல்ல விதமான சூழலையும் எண்ணங்களையும் கொடுப்பதில்லை. நாமும் ஏதோ ஒரு இடத்தில் தேங்கி நிற்பது போன்ற ஒரு உணர்வுகளை கொடுக்கும். ஆதலால் இதையும் அகற்றி விட வேண்டும்.
5. துடைப்பம்:
நம்முடைய வீடுகளை சுத்தமாக வைத்திருக்க உதவக்கூடிய ஒரு முக்கியமான பொருள் துடைப்பம். ஆக துடைப்பத்தையும் நாம் மரியாதையாக கையாள வேண்டும். அதேபோல் உடைந்த அல்லது நீண்ட நாட்கள் ஆன துடைப்பங்கள் வீடுகளில் இருந்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும். அது அதிக அளவிலான எதிர்மறையாற்றலை உருவாக்க கூடியது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |