இந்த 5 இலைகளை வைத்து பூஜை செய்து பாருங்கள் - நினைத்தது நடக்கும்!
பூஜைக்குரிய சக்தி வாய்ந்த இலைகள் எதெல்லாம் என்பது குறித்துப் பார்ப்போம். தெய்வ வழிபாடு முதல் அனைத்து சுப காரியங்களிலும் பல வகையான இலைகள் பயன்படுத்தப்படுகிறது. பூஜையில் எந்த இலைகளை பயன்படுத்த வேண்டும்? அதன் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வில்வ இலை
சிவனுடன் தொடர்புடைய புனிதமான இலையாக பார்க்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு பழம் அல்லது இலை வடிவில் வழங்கப்படுகிறது. எனவே, இந்த இலை கொண்டு பூஜிப்பதன் மூலம் ஜென்மபாவங்கள் விலகும் எனக் கூறப்படுகிறது.
வெற்றிலை
புதனின் சின்னமாக வெற்றிலை உள்ளது. ஜோதிட பரிகாரங்களுக்கும் பயன்படுகிறது. இதனைக் கொண்டு விளக்கு ஏற்றி முருகனை வழிபடவே, ஆசி கிடைக்கும். அதேபோல், ஆஞ்சநேயரை பூஜித்தால் காரியத்தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
துளசி
வைஷ்ணவர்களுடன் தொடர்புடைய வழிபாட்டில் முக்கிய இடம் பிடிக்கிறது. துளசி செடியால் வீட்டில் துக்கமும் துன்பமும் இருக்காது என்பது நம்பிக்கை. இதனைக் கொண்டு விஷ்ணுவையும், லக்ஷ்மிதேவியையும் வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று செழிப்பாக வாழலாம்.
அருகம்புல்
விநாயகர் என்றாலே நினைவில் வருவது அருகம்புல்தான். அந்த அளவிற்கு அவருடன் தொடர்புடைய ஒன்று. இதன்மூலம் அவரை வழிபட்டு வருவதன் மூலம் பகை நீங்கி, தொழிலில் முன்னேற்றம் கிட்டும்.
மருதாணி
மகாலக்ஷ்மியின் அம்சம் கொண்டதாக கருதப்படுகிறது. மருதாணி இலையை வீட்டில் வைத்து பூஜை செய்கையில், கணவன் மனைவியிடையே ஒற்றுமை வலுக்கிறது. துர்மரணம், அகால மரணம் ஏற்படாது என கருதப்படுகிறது.