தெய்வங்களின் பூஜை பொருட்களும் அதன் முக்கியத்துவமும்
நாம் அனைவரும் கவனித்திருப்போம்.பூஜையின் பொழுது கட்டாயம் வாழைப்பழம் நம் வழிபாட்டில் இருப்பதை.அப்படியாக வாழைப்பழம் வைத்து வழிபடுவது என்பது ஒரு விதிமுறை ஆகிவிட்டது.ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் பலருக்கும் தெரிவதில்லை.
இப்பொழுது நாம் ஏன் தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைத்து வழிபாடு செய்யவேண்டும்?அதன் பின்னாளில் இருக்கும் காரணத்தை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.
பொதுவாக வாழைப்பழத்திற்கு ஒரு குணம் உண்டு.வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைத்து வருவதில்லை.இது பிறவா நிலையை குறிக்கிறது.ஆன்மீகத்தின் உச்சக்கட்டமே பிறவா நிலையை அடைவது தான்.
எல்லா ஞானிகளும்,சித்தர்களும் இறைவனிடம் கசிந்து உருகி கேட்கும் ஒரே கோரிக்கை பிறவாநிலை வேண்டும் என்று.அதை உணர்த்தும் விதமாக இந்த வாழை பழம் பூஜையில் வைக்க படுகிறது.
அதுபோல் பூஜையில் வைக்கும் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் நிலத்தில் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.
அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. இவ்வாறு இறைவனுக்கு படைக்கும் பூஜை பொருட்கள் எவ்வளவு தேர்ந்து எடுக்கப்பட்டதாக நம்முடைய முன்னோர்கள் வைத்து காலம் காலமாக வழிபட்டு வருகிறார்கள்.நாமும் அதை மறவாமல் பின் தொடர்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |