நாளை ஆடிப்பூரம் அன்று வீட்டில் வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள்
ஆடி மாதம் அன்று ஆடி பூரம் மிக விஷேசமாக கருதப்படுகிறது.அந்த நாளில் அம்பாளுக்கு மிக முக்கியமாக வாங்க வேண்டிய காதோலை கருகமணி, கண்ணாடி வளையல், மருதாணி.
நாளை அம்பாளுக்கு வலைக்காப்பு நடத்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.ஆதலால் அம்பாளுக்கு வலையல் வாங்குவது மிக அவசியமாக கருதப்படுகிறது.
எந்த நல்ல நிகழ்வாக இருந்தாலும் பெண்களுக்கு கையில் மருதாணி வைப்பது என்று பிடித்தமான ஒன்று. ஆக அம்பாளுக்கு நாளைய தினம் இந்த மருதாணியை வைத்து வழிபாடு செய்து விட்டு அந்த மருதாணியை எடுத்து வீட்டில் இருக்கும் பெண்கள் கையில் இட்டுக் கொள்ளலாம்.
அடுத்தபடியாக காதோலை கருகமணி இது மங்கள பொருட்களில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு பொருள். பொதுவாக அந்தக் காலத்தில் இப்பொழுது போல் தங்கம் எல்லாம் கிடையாது.
திருமணம் ஆன பெண்கள் தாலிக்கு பதில் பண ஓலையால் செய்யப்பட்ட தாலியை தான் பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்தார்கள். காய்ந்த பண ஓலையில், இன்னாருடைய மகனை, மகளை இன்னாருக்கு திருமணம் செய்து வைத்ததாக எழுதி அதை சுருட்டி கயிறில் கோர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
பண ஓலைக்கு இன்னொரு பெயர் தான் ‘தாள ஓலை’. தாள ஓலையில் செய்ததால் தான் அதை தாலி என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தாலி செய்ய பயன்படுத்தப்பட்ட பொருள்தான் பண ஓலை. இந்த பண ஓலையோடு சேர்த்து கருகமணியையும் தாலியோடு இணைத்து அந்த காலத்தில் கழுத்தில் மாட்டிக் கொள்வார்கள்.
மேலும் ஓலையில் செய்யப்பட்ட பொருட்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வரும் தலைமுறையினர் புரிந்து கொண்டு பின் பற்றவேண்டும் மறக்கக்கூடாது என்பதற்காகத்தான், இந்த பொருட்களை எல்லாம் அம்பாள் வழிபாட்டில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |