இன்றைய ராசி பலன்(24-05-2025)
மேஷம்:
இன்று எதிர்பாராத விதமாக நிறைய செலவுகளை சந்திக்கக்கூடும். எதையும் நிதானத்துடன் கடைப்பிடிப்பது நல்லது. சொந்த வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
ரிஷபம்:
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். ஒரு சிலருக்கு பணியில் சந்தித்த சிக்கல்கள் விலகும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்:
இன்று கொடுக்கல் வாங்கலில் சில சிக்கலை சந்திப்பீர்கள். மறைமுக எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். எதிர்கால சிந்தனையுடன் செயல்பட்டால் நன்மை உண்டாகும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
சிம்மம்:
இன்று உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் திடீர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நன்மை உண்டாக்கும்.
கன்னி:
எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகலாம். நேற்று வரை குழப்பத்தை கொடுத்த விஷயம் இன்று நல்ல முடிவை தரும். இன்று தடையும் தாமதம் பிறகே நீங்கள் நினைத்த விஷயத்தை சாதிப்பீர்கள்.
துலாம்:
நண்பர்கள் இன்று உதவியாக இருப்பார்கள். சில வேலைகளை பல போராட்டங்களுக்கு பிறகே செய்து முடிப்பீர்கள். மனதில் எதிர்காலம் பற்றிய கவலை தோன்றி மறையும்.
விருச்சிகம்:
நேற்றைய விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
தனுசு:
சொத்து விவகாரத்தில் சந்தித்த பிரச்சனைகள் இன்று நல்ல முடிவை பெரும். இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் போகலாம்.
மகரம்:
வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர் ஒத்துழைப்பு எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும். மற்றவர் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்.
கும்பம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சதயம்: எடுத்த வேலையிலும், வியாபாரத்திலும் கவனம் செலுத்துவீர். நினைத்ததை அடைவீர். செல்வாக்கு உயரும்.சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்.
மீனம்:
இன்று தெளிவாக சிந்தித்து செயல்படுவதால் எதிலும் வெற்றி பெறலாம். உங்களுடைய மன குழப்பங்கள் அகலும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |