இன்றைய ராசி பலன்(13-03-2025)

Report

மேஷம்:

இன்று குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். சிலருக்கு சகோதரன் வழி உறவால் நன்மை உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு இரு முறை யோசித்து செயல்படுவதால் வெற்றி பெறலாம்.

ரிஷபம்:

இன்று உங்கள் இழுபறியாக இருந்த வேலை நல்ல முடிவு பெரும். வியாபாரிகள் பிறர் சூழ்நிலை அறிந்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் குழப்பம் நீங்க இறை வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:

உங்கள் முகத்தில் சிறு சோகம் காணப்படலாம். பெற்றோர்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்தவேண்டும். மதியம் மேல் பணியில் உங்களுக்கு எதிராக சில செயல்பட வாய்ப்புள்ளது.

கடகம்:

இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். செயல் சாதகமாகும். உங்கள் பேச்சாற்றல் இன்று கை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். 

சிம்மம்:

இன்று கடன் வாங்கி எந்த ஒரு ஆடம்பர செயலையும் செய்யவேண்டாம். குடும்பத்தில் பணப்பிரச்சன்னை வர வாய்ப்புள்ளது. வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்கலாம்.

கன்னி:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் சில தடங்கல் உண்டாகலாம். யாரையும் நம்பி எந்த ஒரு சொந்த விஷயத்தையும் பகிர வேண்டாம். சரியான உணவு எடுத்து கொள்வதால் உடல் நலம் பெரும்.

துலாம்:

இன்று காலையில் இருந்து சோர்வாக காணப்படுவீர்கள். உங்களுக்கு எதிர்பாராத நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வேலை பளுவால் மனஅழுத்தம் உண்டாகும்.

இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதல் ரொம்ப கஷ்டம் - உங்க ராசி இருக்கா பாருங்க

இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதல் ரொம்ப கஷ்டம் - உங்க ராசி இருக்கா பாருங்க

விருச்சிகம்:

பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளரால் வியாபாரம் லாபம் தரும். நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும். 

தனுசு:

வேலை செய்யும் இடத்தில் உங்கள் மதிப்பு உயரும். திட்டமிட்ட வேலைகளை தடை இன்றி செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு பிள்ளைகளால் சில பிரச்சனைகள் உருவாகலாம்.

மகரம்:

தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். நியாயமற்ற வேலை வேண்டாமே.  வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.

கும்பம்:

உங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் மனக்குழப்பம் நீங்கும். கூட்டுத் தொழில் லாபமடையும். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். 

மீனம்:

உங்கள் செல்வாக்கு உயரும் நாள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்கள். பணத்திற்காக மேற்கொண்ட பிரச்சனைகள் நல்ல முடிவு பெரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US