நாளைய ராசி பலன் (19-12-2025)
மேஷம்:
இன்று உடல் நிலையில் சில தடுமாற்றம் வரலாம். குடும்பத்தினர் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
ரிஷபம்:
இன்று சகோதிரி உறவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கை விஷயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் சேருவார்கள்.
மிதுனம்:
திருமணம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமை காப்பது நல்லது. திடீர் முடிவுகள் ஆபத்துகளில் முடியும். மதியம் மேல் பிடித்த உணவுகள் சாப்பிட்டு மகிழும் நாள்.
கடகம்:
தொழில் காரணமாக வெளியூர் செல்ல நேரலாம். திடீர் நண்பர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் உடல் நிலையில் முழு ஆர்வம் செலுத்த வேண்டிய முக்கியமான நாள்.
சிம்மம்:
நிச்சயம் வீடுகளில் பெரிய குழப்பங்கம் வந்து மறையும். அமைதி காப்பது நன்மை தரும். தேவை இல்லாத வார்த்தைகள் விடாதீர்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு சில அழுத்தங்கள் வரலாம்.
கன்னி:
வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் நிலை உருவாகும். மாலை மேல் மகிழ்ச்சியான செய்து வந்து சேரும்,
துலாம்:
உங்கள் மீது நண்பர்கள் அதிக அக்கறை செலுத்தும் நாள். பிரிந்து சென்ற உறவின் சில உண்மை முகம் தெரிய வரும். இறைவழிபாடு செய்வது வாழ்க்கைக்கு நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.
விருச்சிகம்:
நண்பரும் எதிரியாக மாறும் நிலை வரலாம். யாரையும் மனம் காயப்படும் படி பேசாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் நிறைய போட்டி பொறாமைகள் சந்திக்கும் நாள். கவனம் தேவை.
தனுசு:
உங்களுக்கு உடல் சோர்வும் தேவை இல்லாத அலைச்சல் வரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பிள்ளைகள் உடல் நிலையில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மகரம்:
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். வியாபாரத்தில் உங்கள் பேச்சு திறனால் காரியம் சாதித்து கொள்வீர்கள். உங்கள் வீடுகளில் தடைபட்ட வேலை நல்ல முறையில் வெற்றி அடையும்.
கும்பம்:
தடைபட்ட பொருளாதாரம் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாளாக செய்யவேண்டும் என்ற நினைத்த காரியம் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
மீனம்:
நீண்ட நாட்களாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஒரு முடிவை சந்திக்கும். அரசாங்க ரீதியாக உங்களுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும் நாள். மனதில் தோன்றிய குழப்பங்கள் யாவும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |