இன்றைய ராசி பலன் (04-01-2026)
மேஷம்:
ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்களால் உடல் அசதி வரும் வாய்ப்புகள் இருக்கிறது. சொந்த விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்:
இன்று உங்கள் தொழில் ரீதியாக ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். இடம் மாற்றம் பற்றி குடும்பத்துடன் ஆலோசனை செய்வீர்கள். அத்தை வழி உறவால் இருந்த சிக்கல் விலகக் கூடிய நாள்.
மிதுனம்:
குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியான நிலை உருவாகும். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
கடகம்:
இன்று நீங்கள் நேர்மறையாக யோசிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை ரீதியாக புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
சிம்மம்:
தந்தை வழி உறவுகளால் உங்களுக்கு சில ஆதாயமும் ஆதரவும் கிடைக்கும். மனதில் உள்ள குழப்பத்திற்கான ஒரு பதில் தேடுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் சற்று கவனமாக பேசுவது அவசியம்.
கன்னி:
இன்று வியாபாரம் செய்யும் பொழுது நீங்கள் மிக கவனமாக பேச வேண்டும். அலுவலகத்தில் ஒரு சிலருக்கு பணி சுமை அதிகரிக்கலாம். தங்கம் வாங்குவதை பற்றி யோசனை உண்டாகும்.
துலாம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை பற்றிய தேடுதலில் நீங்கள் இன்று இறங்குவீர்கள். புதிய விஷயங்களை தேடி கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் பிறக்கும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் திட்டமிட்ட பணியை சரியாக செய்து முடிப்பீர்கள். உங்கள் நெருக்கமானவர்களை பற்றிய ஒரு தவறான புரிதல் விலகும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் நாள்.
தனுசு:
குடும்பத்தில் சந்தித்து வந்த சொத்து பிரச்சனைகளை எல்லாம் சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மகரம்:
வெளியூர் பயணங்களில் புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதிய ஆசைகள் உருவாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகம் காட்டுவீர்கள். தடைகள் விலகும்.
கும்பம்:
எதிர்பாராத சில செலவுகளை நீங்கள் சந்திக்கலாம். திடீர் என்று வேலையில் ஒரு சில எதிரிகளை சந்திப்பீர்கள். காதல் வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும் நாள்.
மீனம்:
வருமானம் உயர்த்துவதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பீர்கள். உங்களுடன் இருப்பவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளக்கூடிய அற்புதமான நாள். மன அமைதி கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |