இன்றைய ராசி பலன் (31-03-2026)

Report

மேஷம்:

நீண்ட நாட்கள் முடிவிற்கு வராத காரியம் முடிவை பெறும். மாணவர்கள் உயர் கல்விக்கான விஷயங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். சொந்தங்கள் பற்றி புரிந்து கொள்ளும் நாள்.

ரிஷபம்:

உங்களின் தேவைகளை இன்று பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் தேவை இல்லாத வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். மதியம் மேல் தேவை இல்லாத அலைச்சல் வர வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்:

இன்று உங்களின் முயற்சிகள் முன்னேற்றம் அடையும் நாள். தடைகளை மீறி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினர் இடையே தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். பிடித்த உணவை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் தான் அரசியலில் வாழ்க்கையில் ஜொலிப்பார்களாம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் தான் அரசியலில் வாழ்க்கையில் ஜொலிப்பார்களாம்

கடகம்:

இன்று தேவை இல்லாமல் உணர்ச்சிவசப்படாதீர்கள். உணவு விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தந்தை உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நன்மையான நாள்.

சிம்மம்:

வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். உங்கள் மீது சிலர் வெறுப்புகள் காட்டுவார்கள். அரசியல் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல அனுகூலம் இருக்கும்.

கன்னி:

மனக்குழப்பங்கள் விலகும். திருமணம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு இருந்து வந்த சிக்கல் விலகும் நாள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள்.

துலாம்:

பிடித்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

விருச்சிகம்:

கலைத்துறையில் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். வேலை தொடர்பாக மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். பெரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நன்மையான நாள்.

தனுசு:

இன்று வேலை பளு அதிகரிக்கும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அரசு தொடர்பான விஷயங்களில் நல்ல லாபமும் அனுகூலமும் உண்டாகும்.

உலகத்தில் ஒருவர் வாங்கவே கூடாத சாபம் என்ன தெரியுமா?

உலகத்தில் ஒருவர் வாங்கவே கூடாத சாபம் என்ன தெரியுமா?

மகரம்:

உங்களை சுற்றி உள்ள நபர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்களை சற்று கவனம் செலுத்த வேண்டும். எதிரிகளை வீழ்த்தும் நாள்.

கும்பம்:

இன்று உங்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குழந்தைகளின் நலனுக்காக சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

மீனம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல அனுகூலம் உண்டாகும். வங்கி தொடர்பாக நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். திருமண வரன் நினைத்தது போல் அமையும்.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US