இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(07.09.2024)
மேஷம்
நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள்.
ரிஷபம்
உங்கள் செல்வாக்கு உயரும்.வெளியூர் பயணம் நன்மை தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நினைத்ததை சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடிவிற்கு வரும்.
மிதுனம்
நீங்கள் ஈடுபடும் வேலைகளில் எதிர்மறையான பலன்கள் ஏற்படும். உங்கள் முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
நீங்கள் நீண்ட எதிர்பார்த்த வருமானம் தள்ளிப்போகும்.வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு ஏற்படும் விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர்.உழைப்பால் உயர்வு காணும் நாள். மற்றவரால் செய்ய முடியாத வேலையைச் செய்து வெற்றி பெறுவீர்.
கன்னி
நீண்ட நாள் கைக்கு வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
துலாம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உங்களை விட்டு விலகியவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர்.
விருச்சிகம்
வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும்.உழைப்பால் உயர்வு காணும் நாள்.உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
தனுசு
உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பர்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்.
மகரம்
வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த பணம் கையில் கிடைக்கும். யோகமான நாள். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை இன்று அடைவீர்.
கும்பம்
குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும்.முயற்சியில் தடைகள் ஏற்பட்டாலும் நினைத்ததை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
மனதில் குழப்பம் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறாமல் போகலாம்.ஆனால் மதியம் மேல் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |