நாளைய ராசி பலன்(01-10-2025)

Report

மேஷம்:

இன்று சிலருக்கு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் சங்கடம் வரலாம். குடும்பத்தில் சில சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக செல்ல வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை.

ரிஷபம்:

இன்று சிலருக்கு காலை முதல் உடல் சோர்வு உண்டாகலாம். எதையும் தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. உங்கள் பற்றி சிலர் தவறாக புரிந்து கொண்டு செயல் பட வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்:

இன்று ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் சில சிரமங்கள் வரலாம். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். வம்பு வழக்குகள் உங்களை தேடி வர வாய்ப்புகள் உள்ளது.

கடகம்:

உங்கள் வீடுகளில் காலை முதல் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் விலகி நன்மை கிடைக்கும் நாள்.

சிம்மம்:

உறவினர்கள் இடையே மதிப்பு உயரும். அரசு தொடர்பான உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நினைத்த காரியங்கள் உங்களுக்கு கைகூடி வரும் நாள். தொழிலில் லாபம் நிறைந்த நாள்.

கன்னி:

எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள். உடன் பிறந்தவர்களால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். மனதில் ஒருவித நம்பிக்கை பிறக்கும் நாள்.

துலாம்:

இன்று இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். சிலருக்கு எதிர்காலம் பற்றி கவலை உண்டாகும். நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்:

சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மகிழ்ச்சி காணும் நாள். வேளையில் சிலருக்கு சில குழப்பமான நிலை உண்டாகலாம். கலை துறையில் உள்ளவர்களுக்கு திறமை வெளிப்படும் நாள்.

தனுசு:

நண்பர்களுடன் உங்கள் நேரத்தை செலவு செய்வீர்கள். சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். பேச்சுக்கள் வழியாக பாராட்டுக்கள் பெறுவீர்கள்.

மகரம்:

இன்று மூன்றாம் நபரிடம் உங்கள் சொந்த வாக்கியத்தை கிர்ந்து கொள்ளாதீர்கள். காலை முதல் சிலருக்கு மனம் பதட்டமாக காணப்படும். இறைவழிபாடு மேற்கொண்டு நன்மை பெறுவீர்கள்.

கும்பம்:

குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் காலையில் தோன்றி மறைந்தாலும் மதியமேல் உங்களுக்கு சாதகமான நிலையாக இருக்கும். உங்களுடைய பேச்சுக்களால் இன்று சமுதாயத்தில் மதிப்பு உயரும்.

மீனம்:

இன்று சில சுப காரியங்களை முன் நின்று நடத்தக்கூடிய பெருமையான நாள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல முடிவை தரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US