நாளைய ராசி பலன்(15-08-2025)
மேஷம்:
இன்று எதிர்பாராத நபரை சந்திப்பதால் சில கஷ்டங்கள் உருவாகும். நீங்கள் நினைத்த நேரத்தில் உங்கள் வேலை முடிவடைவதில் சில சிரமங்களை சந்திக்கலாம். பிள்ளைகளால் சில சங்கடங்கள் உருவாகும்.
ரிஷபம்:
காலை முதல் தலை வலியால் சில சங்கடங்களை சந்திக்கலாம். தெரிந்தவர் வழியாக எதிர்பாராத பிரச்சனைகள் வரக்கூடும். வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
மிதுனம்:
எதிர்கால வாழ்க்கையை பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் வந்து பிறகு சரியாகும். இன்று முக்கியமான முடிவுகளை மிக கவனமாக எடுக்க வேண்டிய நாள்.
கடகம்:
தொழில் வாழ்க்கையில் மதியம் வரை சில பிரச்சனைகள் வந்து செல்லும். யாராக இருப்பினும் சற்று கவனமாக பழகுவது அவசியம். உங்களை அறியாமல் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளலாம்.
சிம்மம்:
பிறரை நம்பி முக்கியமான வேலையை ஒப்படைக்காதீர்கள். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் காணும் நாள் சமுதாயத்தில் முக்கிய நபரின் அறிமுகம் கிடைக்கும்
கன்னி:
சகோதரன் வழி உறவால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். எதிர்கால திருமண வாழ்க்கையை பற்றிய யோசனை உருவாக்கும். பிள்ளைகள் படிப்பை பற்றிய சில கவலைகள் ஏற்படும்.
துலாம்:
பிறரை பற்றி நினைக்காமல் சுயநலமாக செயல்படுவதால் மட்டுமே வெற்றி காண முடியும். உடல்நலத்தில் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். முடிந்த வரை அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்:
தேவை இல்லாமல் அக்கம் பக்கத்தினரிடம் பேசுவதால் சண்டைகள் உருவாகும். தற்பெருமையை குறைத்துக் கொள்வது நல்லது. உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
தனுசு:
வீடுகளில் சண்டையை தவிர்க்க தியானம் செய்யலாம். மன சங்கடத்தை கொடுக்கும் நாள். இறைவழிபாடு மட்டுமே ஆறுதல் வழங்கும்.பெண் பிள்ளையால் பெறுமை அடைவீர்கள்.
மகரம்:
முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் மட்டுமே நினைத்ததை சாதிக்க முடியும். நண்பர்களிடம் கவனமாக பழக வேண்டும். செல்லப் பிராணிகளிடம் கவனம் தேவை, எதிர்பாராத நற்செய்தி வந்து சேரும்
கும்பம்:
உங்கள் பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பு கூடும். பிரிந்து சென்ற உறவு மீண்டும் உங்களை தேடி வந்து பேசுவார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நட்புகளை சந்தித்து மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
மீனம்:
இன்று வாழ்க்கையை பற்றி புரிதல் ஏற்படும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உண்மை நிலையை அறிந்து செயல்படும் நாள். வழக்கு விஷயங்களில் கவனம் தேவை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







