இன்றைய ராசி பலன்(12.12.2024)

Report

மேஷம்

செய்யும் செயல்களில் கூடுதல் கவனம் தேவை.புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.நேற்று உண்டான பிரச்சனைகள் விலகும்.குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

ரிஷபம்

வரவு ஒரு பக்கம் இருந்தாலும் செலவு ஒரு பக்கம் இருக்கும்.பிறரை அனுசரித்து செல்வது உங்களுக்கு நன்மையாக அமையும்.உத்யோகத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மிதுனம்

பழைய நினைவுகள் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும்.புதிய நபர்களுடன் ரகசியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.தடைபட்ட காரியம் பல முயற்சிகள் பிறகு நடக்கும்.

கடகம்

அலுவலத்தில் வேலை பளு கூடும்.திடீர் வேலையால் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.திட்டமிட்ட வேலை இயல்பாக நடக்கும்.உதவி என்று நாடிவருபவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சிம்மம்

தொட்ட காரியம் நடக்கும்.பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.கோயில் வழிபாட்டால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.வரவில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும்.

இறந்தவர் உடலை ஏன் தனியாக வைக்கக்கூடாது?கருடபுராணம் சொல்வது என்ன?

இறந்தவர் உடலை ஏன் தனியாக வைக்கக்கூடாது?கருடபுராணம் சொல்வது என்ன?

துலாம்

கூட்டு தொழில் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.வாழ்க்கை துணையின் முழு கிடைக்கும்.பாதியில் நின்ற வேலை விரைவில் நடத்தி முடிப்பீர்கள்.வருமாம் திருப்தி கரமாக அமையும்.

விருச்சிகம்

உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர்.நேற்றைய பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.

தனுசு

கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும்.பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மகரம்

உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். நிதானமாக செயல்படுவதும், உடல்நிலையில் கவனம் செலுத்துவதும் அவசியம்.வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்

எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர்கள்.உடல், மன நிலையில் உற்சாகம் தோன்றும்.

மீனம்

இன்று வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.பண பிரச்சனை உண்டாகும்.வெளியே செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

     

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US