இன்றைய ராசி பலன்(20.07.2024)
மேஷம்
இன்று உங்களுக்கு யோகமான நாள். தடைப்பட்ட காரியங்கள் மீண்டும் கைகூடி வரும். மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை முடித்து காட்டுவீர்கள்.கோயில் வழிபாட்டால் நன்மை அடையும் நாள்.
ரிஷபம்
நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் இருந்த இனம் புரியாத குழப்பம் விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.வியாபாரத்தில் முன்னேற்றம் அடையும் நாள்.
மிதுனம்
நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.போட்டியாளர்களால் சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
கடகம்
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர். நீங்கள் நினைத்தது நடக்காமல் மனம் சோர்வடையும்.புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுபடலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
சிம்மம்
நீங்கள் எடுக்கும் முயற்சி இன்று நிறைவேறும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நல்ல முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்
கன்னி
தொழிலில் எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவீர்கள்.வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும்.அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடிவிலகும்.
துலாம்
நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியடையும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும்.இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.உங்களுக்கு உதவி புரிவதாக சொன்னவர் விலகிச்செல்வர்.வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செலுத்துவீர்கள்.உங்கள் செல்வாக்கு உயரும்.
தனுசு
இழுபறியாக இருந்த ஒரு வேலை நிறைவேறும். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். மனம் குழப்பம் அடையும்.
மகரம்
உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வராமல் போகலாம். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். சந்திர வழிபாடு சாதகமாக அமையும்.
கும்பம்
நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணியாளர்களால் சங்கடம் உண்டாகும். அமைதியான நாள்.
மீனம்
கோயில் வழிபாட்டில் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அலுவலகத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |