இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(18.06.2024)

Report

மேஷம்

இன்று நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.நினைத்ததை நினைத்த படி செய்து முடிப்பீர்கள்.அலுவலகத்தில் எத்தனை பெரிய கடினமான வேலைகள் இருந்தாலும் அதை சுலபமாக செய்து முடிக்க கூடிய நாள்.

ரிஷபம்

பிரிந்து சென்ற நண்பர்கள் திரும்ப வந்து பேசுவார்.குடும்பத்தில் அமைதி நிலவும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.இருப்பினும் அடுத்தவரை நம்பி எந்த முயற்சியிலும் இன்று ஈடுபட வேண்டாம்.

மிதுனம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.மற்றவர்களுக்காக எதையும் செய்ய வேண்டாம்.சிக்கல்களில் மாட்டி கொள்ள நேரிடும் ஆதலால் சற்று கவனம் அவசியம்.

கடகம்

புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். விலகிச்சென்ற உறவுகள் உங்களைத்தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள்.

சிம்மம்

திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனை முடிவிற்கு வரும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துப்போவது நன்மையாகும்.

கன்னி

உங்கள் ஆற்றல் வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.எதிரிகளால் உண்டான நெருக்கடிகள் விலகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள்.

துலாம்

மனதில் இனம் புரியாத கவலை பிறக்கும்.இருந்தாலும் எதையும் சாதித்து காட்டலாம் என்ற நம்பிக்கை பிறக்கும்.தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். அமைதி காப்பது நல்லது.வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வரவு அதிகரிக்கும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

மகரம்

உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும்.செய்துவரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

கும்பம்

இன்று இழுபறியான செய்யலை முடித்து காட்டுவீர்கள்.எடுத்த முடிவு சரிதானா என்று பலமுறை யோசித்து முடிவு செய்ய வேண்டும்.திருமண வரன் கை கூடி வரும்

மீனம்

இன்று மனதில் தெம்பும் ஆரோக்கியமும் பிறக்கும்.எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை உருவாகும்.குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US