நாளைய ராசி பலன் (16-02-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக சந்தித்து வந்த குழப்பங்கள் விலகும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.
ரிஷபம்:
உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். கணவன் வழி உறவுகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் உருவாகும். மனதில் ஆன்மீக சிந்தனை தோன்றும்.
மிதுனம்:
மனதில் ஆயிரம் குழப்பங்கள் தோன்றி மறையும். எதையும் தீர ஆலோசித்து பிறகு செயல்படுவது நன்மை அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
கடகம்:
இன்று பிள்ளைகளை பற்றிய பயம் உண்டாகும். எதிர்கால தேவைக்கான விஷயங்களை செய்து கொள்வீர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும்.
சிம்மம்:
வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி:
இன்று உடன் பிறந்தவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் மனநிலையை புரிந்து நடந்து கொள்ளுங்கள். திருமண தொடர்பான பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.
துலாம்:
இன்று உங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்கக் கூடிய நாள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
விருச்சிகம்:
இன்று மனதில் பொறாமை சிந்தனை வளர்த்துக் கொள்ளாதீர்கள் வாழ்க்கைத் துணையிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வேலைபளு அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
தனுசு:
வீண் பிடிவாதத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். கவனச் சிதறலால் முக்கியமான பொருட்களை தவறவிடலாம். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
மகரம்:
வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். நண்பர்களுடன் இனிமையான நேரம் செலவிடுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
கும்பம்:
இன்று மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலை ரீதியாக நிறைய குழப்பங்கள் உண்டாகும். பயணம் மேற்கொள்ளும் பொழுது உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
இன்று குடும்பத்தில் நீங்கள் நடுநிலையாக செயல்பட முடியாமல் போகலாம். மனதில் ஆயிரம் குழப்பங்களும் சிந்தனைகளும் உருவாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |