இன்றைய ராசி பலன்(09.02.2025)
மேஷம்:
இன்று பொருளாதாரத்தில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள்.அலுவலகத்தில் சிலர் உங்களுக்கு எதிராக செயல்படலாம்.எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செயல்படுங்கள்.
ரிஷபம்:
பிறரிடம் பணம் கொடுத்து வாங்குவதில் சில சங்கடம் உருவாகும்.ஆதலால் கவனமாக இருக்க வேண்டும்.ஒரு சிலருக்கு நண்பர்களால் பிரச்சன்னை உருவாகும்.எதையும் தீர ஆலோசித்து செயல்படவேண்டும்.
மிதுனம்:
குடும்பத்தில் சில தடைகள் தோன்றும்.நேற்று வரை உங்களுக்கு எதிராக இருந்த பிரச்சன்னை சாதகமாக அமையும்.சகோதரன் சகோதிரி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
கடகம்:
பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். குடும்பத்தில் நெருக்கடி உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வரும் லாபத்தை விட செலவு கூடும்.
சிம்மம்:
உங்களுடைய எதிர்பார்ப்பு இன்று முழுவதுமாக பூர்த்தி ஆகும்.வியாபாரத்தில் உங்களுக்கு நினைத்த ல்பாம் கிடைக்கும்.பெரியோர்கள் ஆதரவால் சில விஷயங்களை நினைத்த படி நடத்தி முடிப்பீர்கள்.
கன்னி:
வியாபாரம் விருத்தியாகும். வரவால் நெருக்கடி நீங்கும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும். தாராளமாக செலவு செய்வீர்.
துலாம்:
இன்று மனதில் உள்ள கவலைகள் முற்றிலுமாக விலகும்.தந்தை வழி உறவுகளால் சில ஆதரவுகள் கிடைக்கும்.அக்கம் பக்கத்தினர் உறவுகளால் உண்டான பிரச்சன்னை முற்றிலுமாக விலகும்.
விருச்சிகம்:
சந்திராஷ்டமம் என்பதால் நெருக்கடி அதிகரிக்கும். பிரச்னை தேடிவரும்.வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
தனுசு:
குடும்பத்தில் உண்டான சங்கடம் படிப்படியாக குறையும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியாக அமையும்.நன்மையான நாள்.
மகரம்:
தீராமல் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். வருவாய் உயரும். உடல்நிலை சீராகும்.உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள்.
கும்பம்:
திட்டமிட்டு செயல்படுவதால் நீண்ட நாள் முடியாமல் இருந்த வேலை நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்:
இன்று உங்கள் மனதில் தேவை இல்லாத குழப்பம் சங்கடம் உருவாகும்.மூன்றாம் நபரால் சில பிரச்சன்னை உருவாகும்.உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.இறைவழிபாடு நன்மை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |