இன்றைய ராசி பலன் (10-07-2026)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு நண்பர்களால் நன்மைகள் உண்டாகும். பதவி உயர்வி, பொருளாதார சிக்கல் விலகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். நன்மையான நாள்.
ரிஷபம்:
சுற்றி உள்ளவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள். உங்கள் வீடுகளில் திடீர் குழப்பம் சண்டை வரலாம். கவனமாக பேசுவது நல்லது.
மிதுனம்:
எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலருக்கு சித்தர்கள் வழிபாடு உண்டாகும். தந்தை வழி சொத்துக்களால் நன்மை உண்டாகும். சேமிப்பு அவசியம், ஆடம்பர செலவுகள் தவிர்க்கவும்.
கடகம்:
மனதில் குழப்பம் உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரையும் நம்பி பெரிய விஷயங்களை ஒப்படைக்காதீர்கள். உணவு விஷயங்களில் கவனமாக இருங்கள்.
சிம்மம்:
வேலையில் சிறந்து விளங்குவீர்கள். உயர் பதவிகள் உங்களை தேடி வரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
கன்னி:
சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வேலை ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிடித்த உணவுகள் செய்து மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. வருகின்ற எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவிகள் தேடி வரும். பணத்தட்டுப்பாடு குறையும்.
விருச்சிகம்:
குடும்பத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவீர்கள், சிலருக்கு வெளிநாட்டில் தொடர்பாக நற்செய்தி வந்து சேரும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தனுசு:
பிள்ளைகள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களுக்கு பெரிய அளவில் வளர்ச்சியை கொடுக்கும்.
மகரம்:
மன குழப்பம் மற்றும் விரக்தி உண்டாகலாம். உலக உண்மை பற்றி புரிந்துக் கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கோவில் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள்.
கும்பம்:
கலைத்துறையில் இருப்பவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதர்களின் வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் சிறந்து விளங்குவார்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும்.
மீனம்:
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். காதல் வாழ்க்கையில் சிறு சிறுபிரச்சனை உண்டாகலாம். எதையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |