நாளைய ராசி பலன் (16-07-2026)
மேஷம்:
வெளிநாடு தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைக்கூடி வரும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களுக்கான நேரம் செலவு செய்ய விரும்புவீர்கள். வேலை பளு அதிகரிக்கும்.
ரிஷபம்:
இன்று தேவை இல்லாத நண்பர்களால் சில சிக்கல் வரலாம். தொழில் ரீதியாக நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது அவசியம்.
மிதுனம்:
இன்று வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமான நிலை இல்லாமல் போகலாம். மனம் காலை முதல் குழப்பமாகவும் பதட்டமாகவும் காணப்படும். மதியம்மேல் பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
கடகம்:
மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். சுற்றி இருப்பவரை பற்றி புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும் நாள்.
சிம்மம்:
வியாபாரம் விரிவு செய்வதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். கலை துறையில் இருபவர்காளுக்கு பொன்னான காலம் உண்டாகும்.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்திய வேண்டிய நாள். குடும்பத்தில் முக்கிய நபரின் வருகையால் நன்மை உண்டாகும். சிலர் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்:
இன்று காலை முதல் உடல் மனம் சோர்வாக காணப்படும். வெளிவட்டாரம் விரிவடையும். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். காதல் வாழ்க்கையில் பிரச்சனை விலகும்.
விருச்சிகம்:
நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். குழந்தைகளின் நலனில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள். வெளிநாடு செல்லும் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். கடன் தொல்லை விலகும்.
தனுசு:
பிள்ளைகள் பற்றி பெருமை அடைவீர்கள். உணவு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ள குழப்பம் விலகும்.
மகரம்:
உங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். நண்பர்கள் சந்திப்பால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
கும்பம்:
வேலைக்காக திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வேலையில் உங்களின் திறமை வெளிப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
வாழ்க்கையின் உண்மை பற்றி புரிந்துகொள்வீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். இசைத்துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |