இன்றைய ராசி பலன்(26-06-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு கண் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நண்பர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
இன்று தாய் வழி உறவால் சில சிக்கலை சந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் சில எதிர்ப்புகள் உண்டாகும். மனதில் பயமும் பதட்டமும் தோன்றி மறையும். மதியம் மேல் நன்மை உண்டாகும்.
மிதுனம்:
மனதில் தீராத குழப்பங்களும் எதிர்காலம் பற்றிய சிந்தனையும் பயமும் தோன்றும். வெளியூர் பயணம் செல்வதை தவிர்ப்பது நன்மை வழங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள்.
கடகம்:
சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி நன்மை உண்டாகும். குழந்தைகள் ஏதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும்.
சிம்மம்:
வியாபாரத்தில் உங்களுக்கு நினைத்த லாபம் வருவதில் சிரமம் உண்டாகும். தாய் உடல்நிலையில் அக்கறை செலுத்துவது நன்மை வழங்கும். சகோதரியிடம் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி:
மாணவர்கள் படிப்பில் சந்தித்த சிரமங்கள் விலகும். உறவினர்கள் வருகையால் உங்களுக்கு குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் வேலை செய்வார்கள்.
துலாம்:
உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வயிறு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வீண் கோபம், வாக்குவாதத்தை தவிர்த்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்:
துணையிடம் பதற்ற நிலையை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நேரத்தை கழிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். நாளை பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
தனுசு:
இன்று உங்கள் சுற்றியுள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனையால் சில சங்கடங்கள் தோன்றலாம். உறவுகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
துணையிடம் நட்பாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். பணவரவு ஆனது சிறப்பாக காணப்படும். இதனை வைத்து எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள்.
கும்பம்:
இன்று பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் நன்மை உண்டாகும். வரவிற்கு ஏற்ற செலவு உண்டாகும்.
மீனம்:
மனதில் கவலை உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும். உடன் பிறந்தவர்களால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |