நாளைய ராசி பலன் (06-05-2026)

Report

மேஷம்:

இன்று வியாபாரம் தொடர்பாக உங்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுக்கும் நிலை வரலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்:

கலை துறையில் இருப்பவர்களுக்கு முக்கியமான வாய்ப்புகள் தேடி வரும். வேலை பளு அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமைய போகிறது.

மிதுனம்:

திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். திடீர் பண வரவு மகிழ்ச்சி அடையும்.

கடகம்:

ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமைய போகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

உங்களுடைய வீடுகளில் அதிர்ஷ்டமும் மன அமைதியும் பெற பின்பற்ற வேண்டியவை

உங்களுடைய வீடுகளில் அதிர்ஷ்டமும் மன அமைதியும் பெற பின்பற்ற வேண்டியவை

 

சிம்மம்:

தாய் உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பண சேமிப்பில் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு வேலையில் அங்கீகாரம் கிடைக்கும்.

கன்னி:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தொழில் ரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் விலகும். உங்களுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நன்மையான நாள்.

துலாம்:

காதல் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். நண்பர்கள் உங்களுக்கு மிக பெரிய அளவில் உதவியாக இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்கள் மத்தியில் நீங்கள் சொந்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்:

கணவன் வழி உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். யாரையும் நம்பி பணம் கொடுக்காதீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வரும். சொத்து விஷயங்களில் இருந்த சிக்கல் விலகும்.

கேட்ட வரத்தை கொடுக்கும் முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த 8 திருப்புகழ்

கேட்ட வரத்தை கொடுக்கும் முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த 8 திருப்புகழ்

தனுசு:

இன்று வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். எதையும் தீர ஆலோசித்து செயல்பட வேண்டும். வழக்கு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.

மகரம்:

இன்று பிடித்த நபர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பெரியவர்களின் முழு ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கும். கடின உழைப்பால் சில முக்கியமான விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

கும்பம்:

காதல் வாழ்க்கையில் சந்தித்த கசப்புகள் விலகும். அரசியல் ரீதியாக புதிய அனுபவங்களை பெறுவீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து கொள்வீர்கள்.

மீனம்:

இன்று படிக்கட்டுகளில் ஏறும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். சொத்து பிரச்சனை விலகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US