உங்களுடைய வீடுகளில் அதிர்ஷ்டமும் மன அமைதியும் பெற பின்பற்ற வேண்டியவை
வீடு என்றால் கட்டாயம் அங்கு மன அமைதி வேண்டும். அப்பொழுதுதான் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் பொன், பொருள் சேர்க்கையும் கிடைக்கும். அப்படியாக, நம் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற அவசியமாகவும் கட்டாயமாகவும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
1. நாம் வசிக்கும் இடங்களில் எப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். சுமுகமான பேச்சு வார்த்தைகள் இருந்தால் தான் மன அமைதியுடனும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். மேலும், அவர்களுடன் சண்டை போடுவதால் நம்முடைய வாழ்க்கை நிலை பாதிக்கலாம்.
2. எந்த சூழ்நிலையிலும் வேறு ஒருவர் உபயோகம் செய்த தங்க நகைகளை வாங்காதீர்கள். ஒருவர் பயன்படுத்திய நகைகளை எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல் இரண்டும் இருக்கக்கூடும் என்பதால் கவனமாக வாங்க வேண்டும்.

3. எப்பொழுதும் எளிதில் அகலாத கறை படிந்த ஆடையை வெளியே அணிந்து செல்லக்கூடாது. மற்றவர்கள் பார்க்கும் பொழுது தவறான எண்ணங்கள் தோன்றலாம்.
4. வீட்டின் நுழைவாயிலை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுதான் அதிர்ஷ்டத்தை பெற்று கொடுக்கக்கூடிய முதல் படியாகும்.
5. எந்த காலத்திலும் உங்களைப் பற்றி நீங்கள் தவறாக மதிப்பிடாதீர்கள். இது உங்களுடைய மன அமைதியை கெடுக்கக்கூடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |