கேட்ட வரத்தை கொடுக்கும் முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த 8 திருப்புகழ்
கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு கூப்பிட்ட நொடியில் வந்து அருள் புரிவாராக இருக்கிறார். அதைவிட முக்கியமாக முருகப்பெருமானுடைய மந்திரங்களை நாம் பாராயணம் செய்து எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும் அந்த வேண்டுதலுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இதை பல்வேறு பக்தர்கள் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் தத்துவ ரீதியாக உணர்ந்து இருப்பதும் உண்மை. அப்படியாக, முருகப்பெருமானுடைய சக்தி வாய்ந்த திருப்புகழும் அதை நாம் என்ன வேண்டுதலுக்காக பாராயணம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம்.

1.குழந்தை வரம் பெற:
நீண்ட நாட்கள் குழந்தை வரம் இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்கள் கட்டாயமாக முருகப்பெருமானின் 218 வது திருப்புகழை தொடர்ந்து பாராயணம் செய்யும் பொழுது அவர்களுக்கு கட்டாயமாக குழந்தை பாக்கியம் முருகப்பெருமானின் அருளால் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
2. திருமண வரன் அமைய:
ஒருவருக்கு ஜாதகத்தில் திருமண தோஷம் மற்றும் தடைகள் இருந்து கொண்டிருக்கும். அவர்களுக்கு எவ்வளவு வரன்கள் பார்த்தாலும் திருப்திகரமான வரன் அமைவதில்லை. இன்னும் ஒரு சிலருக்கு திருமணம் கைகூடுவதில் மிகப்பெரிய சிக்கல்கள் வருகிறது. அவர்கள் 1296 ஆவது திருப்புகழை பாராயணம் செய்யும் பொழுது விரைவில் அவர்களுக்கு திருமண வரன் அமையும்.
3. கல்வியில் தேர்ச்சி பெற:
மாணவர்கள் கல்வியில் மந்தமாக இருக்கிறார்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கிறது என்றால் அவர்கள் 923 வது திருப்புகழை பாராயணம் செய்யும் பொழுது அவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி கிடைக்கிறது.
4. சொந்த வீடு அமைய:
சிலருக்கு எவ்வளவு பணம் கைகளில் தங்கி இருந்தாலும் அவர்களால் சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை. அவர்கள் கட்டாயமாக 724 வது திருப்புகழை பாராயணம் செய்யும் பொழுது நினைத்தது போல் சொந்த வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
5. நினைத்தது நடக்க:
பலருக்கும் நம்முடைய மனதில் நிறைய ஆசைகளும் கனவுகளும் இருக்கும். ஆனால் அதற்கு நிறைய தடைகளை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு உங்களுடைய காரியங்கள் நினைத்தது போல் நடக்க நீங்கள் 278 ஆவது திருப்புகழை பாராயணம் செய்தால் நிச்சயம் நினைத்த வரம் கிடைக்கும்.
6. அரசு வேலை கிடைக்க:
அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் 899 வது திருப்புகழை பாராயணம் செய்யும் பொழுது நினைத்தது போல் அரசாங்க வேலை கிடைக்கிறது.
7. சொத்து வழக்கு பிரச்சனை தீர:
ஒருசிலருக்கு அதர்மத்தை கையில் எடுப்பவர்களால் அவர்களுடைய சொத்துகளுக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது. அவ்வாறு தேவையில்லாத சொத்து பிரச்சினையை சந்திப்பவர்கள் 729 திருப்புகழை பாராயணம் செய்யும்போது வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.
8. கணவன் மனைவி ஒற்றுமை பெற:
ஒரு சில வீடுகளில் கணவன் மனைவி இடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருக்கக்கூடிய நிலை உள்ளது. அவர்கள் 68-வது திருப்புகழை பாராயணம் செய்து வரும்பொழுது கட்டாயம் கணவன் மனைவி இடையே நல்ல ஒற்றுமையும் கருத்து வேறுபாடும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |