இன்றைய ராசி பலன்(15-03-2025)
மேஷம்:
இன்று எதிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். ஒரு சிலருக்கு நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். முடியாத என்ற பிரச்சன்னை ஒன்று நல்ல முடிவிற்கு வரும்.
ரிஷபம்:
உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை விரிசல் அடையும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் மகிழ்ச்சியாக பேசி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். வேலைக்காக வெளியூர் செல்ல நேரிடலாம். ஒரு சிலருக்கு மனைவி வழியாக நல்ல உதவி கிடைக்கும். நிதானம் தேவை.
கடகம்:
சிந்தித்து செயல்படுவதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். சகோதரர்கள் உதவியால் முக்கிய வேலை நடக்கும்.
சிம்மம்:
இன்று உடலில் சில சிக்கல் உண்டாகும். நண்பர்களுடன் வெளியே செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். உங்களுடைய பிரச்சன்னைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
கன்னி:
எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் துணிச்சலாக செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். பிறரின் பிரச்னைகளுக்கு முன்நின்று தீர்வு காண்பீர்.
துலாம்:
எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவதால் வெற்றிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு தொலை தூர பயணத்தால் அமைதி உண்டாகும். வெற்றி காணும் நாள்.
விருச்சிகம்:
உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர் அலுவலகத்தில் இருந்த சிக்கல் தீரும். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை எளிதாக முடியும்.
தனுசு:
உங்கள் அணுகுமுறையால் நீங்கள் நற்பெயர் சம்பாதிப்பீர்கள். முடிந்த அளவு வார்த்தைகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தேவை இல்லாத சிந்தனைகளை தவிர்க்கவும்.
மகரம்:
தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியான வேலை முடியும்.
கும்பம்:
இயந்திரப் பணிகளில் இருப்பவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.
மீனம்:
உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். அலுவலகத்தில் கவனம் அவசியம். சிலருக்கு தேவதை இல்லாத பிரச்சனை தோன்றும். அமைதி காப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |