இன்றைய ராசி பலன்(18-08-2025)
மேஷம்:
இன்று இவர்கள் வீடுகளில் பதட்டமாக காணப்படுவார்கள். சிலர் முக்கியமான பொருட்களை தொலைக்க நேரலாம். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதால் சில பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
ரிஷபம்:
எதிர்கால வாழ்க்கையை பற்றி குடும்பத்தினரிடம் ஆலோசனை செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு நம்பிக்கையாக இருப்பார்கள். வேலையில் சில சங்கடங்கள் உருவாகும்.
மிதுனம்:
வாழ்க்கை துணைக்கு பரிசு அளித்து மகிழ்வீர்கள். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் பிறக்கும். திருமண வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும். முன்னேற்றமான நாள்.
கடகம்:
சிலருக்கு மதியம் வரை மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு சாதகமாக அமையும். தொழில் ரீதியாக சில எதிர்ப்புகளை சந்திக்கலாம்.
சிம்மம்:
வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள். வழக்கு விஷயங்களை தீர ஆராய்ந்து செயல்பட வேண்டும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. அம்மன் வழிபாடு பிரச்சினையை தீர்க்கும்.
கன்னி:
குடும்பத்தினருடன் சண்டை உருவாகாமல் பார்த்து கொள்வது நல்லது. வேலைக்காக சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். உறவினர்களால் ஏற்பட்ட துன்பம் விலகும். நன்மையான நாள்.
துலாம்:
இறை வழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும். தாய் தந்தையரிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
விருச்சிகம்:
மருத்துவ அறிக்கைகள் உங்களுக்கு சாதகமாக வரும். கணவன் வீட்டாருடன் ஏற்பட்ட விரிசல் விலகும். நீண்ட நாட்களாக குழந்தைக்கு காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி வந்து சேரும்.
தனுசு:
பிள்ளைகள் பற்றி ஏற்பட்ட கவலை விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியான சூழலும் உருவாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
மகரம்:
மூன்றாம் நபரிடம் உங்களுடைய வாழ்க்கை பிரச்சினை பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டாம். நண்பர்களிடம் வாதாடுவதை தவிர்க்க வேண்டும். தானம் செய்வதால் கடினமான காலம் விலகும்.
கும்பம்:
ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வேலை பார்க்கும் நிலை உருவாகும். எதிர்பாராத நபரின் சந்திப்பால் சில மகிழ்ச்சிக்யான செய்திகளை பெறுவீர்கள். புதிய வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.
மீனம்:
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







