இன்றைய ராசி பலன்(29-06-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். தந்தை வழி உறவுகளால் மனம் மகிழ்ச்சி அடையும். சந்தோஷமான நாள்.
ரிஷபம்:
தொழிலில் சில சிக்கலை சந்திப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடலாம். இன்று முடிந்த வரை மனதில் அமைதி காப்பது நன்மை தரும்.
மிதுனம்:
இன்று வாழ்க்கையை பற்றிய பயமும் பதட்டமும் தோன்றும். குழந்தைகள் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.
கடகம்:
இன்று மனசோர்வு உண்டாகும். உடல்நிலையில் அதீத கவனம் செலுத்துவது நன்மை தரும். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல நேரலாம். உறவுகளின் உண்மை முகத்தை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்:
இன்று தாயிடம் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். முன்னோர்கள் வழிபாடு நன்மை தரும். வியாபாரத்தில் லாபத்தை பெறுவீர்கள். வண்டி வாகனம் மாற்றும் யோகம் உண்டாகும்.
கன்னி:
கோயில் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும். சகோதரன் வழி உறவால் நன்மை பெறுவீர்கள். விலகி சென்ற சொந்தம் உங்களை வந்து சேர்வார்கள்.
துலாம்:
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். உடல் உபாதைகள் சரி ஆகும். வழக்கு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.
விருச்சிகம்:
மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் தோன்றும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரியோர் உதவியால் வேலை நடக்கும். சங்கடங்களைக் கடந்து சாதனைப் புரிவீர்.
தனுசு:
பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவீர்கள். பிரிந்த உறவினர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். தொலைத்த பொருள் மீண்டும் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
மகரம்:
நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். எதிலும் இன்று அவசரம் வேண்டாம். சூழ்நிலையை உணர்ந்து அதற்கேற்ப நிதானமாக செயல்படுவது நல்லது.
கும்பம்:
இன்று உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உண்டு. பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்:
பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வில்லங்கம் விலகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். மனைவி வழி சொந்தம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |