சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்த இடம் எங்கு இருக்கு தெரியுமா?
தன்னைத்தானே தோற்றுவித்து வழிபட்ட பெருமை உடையதாக கருதப்படும் மத்தியபுரி அம்பாள் எனும் பெயரில் மீனாட்சி அம்மன் சமேத இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மேலமாசி வீதியில் அமைந்துள்ளது.
இம்மையில் நன்மை தருவார் கோவில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் காணப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள இம்மையில் நன்மை தருவார் கோவில், "பூலோக கைலாயம்" என்றழைக்கப்படுகிறது. இத்தலம் அற்புதங்கள் நிறைந்த தலமாக திகழ்கிறது.
இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் உள்ளது. குரு தோஷம் இருப்பவர்கள் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடுகின்றனர். அறுபது மற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் இந்த ஆலயத்தில் அதிகமாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியனின் மகளாக மீனாட்சி அவதரித்தார். பார்வதியின் அம்சமான மீனாட்சி, தன் தந்தையின் காலத்திற்குப் பின் மதுரையை ஆட்சி புரிகிறாள். மீனாட்சியை மணம் புரியும் மணமகனாக சுந்தரேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் வருகைபுரிகிறார்.
மாப்பிள்ளையான சுந்தரேஸ்வரர், மன்னராகப் பொறுப்புக்கு வருகிறார். ஆட்சி பீடத்தில் அமரும் முன்னர் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. அதனால் சுந்தரேஸ்வரர், தன் ஆத்மாவை சிவலிங்கமாக்கி, பூஜை செய்கிறார். அதன் பின்பு மன்னராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என தலபுராணங்கள் கூறுகின்றன.
கோவில் அமைப்பு:
சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மேற்கு முகமாய் சிவபூஜை செய்கின்றனர். சிற்ப வடிவில் இருவரையும் காண்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கே அருளிய லிங்கமாகத் திகழ்வதால், இவருக்கு “இம்மையிலும் நன்மை தருவார்” என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. இவ்வாலய முகப்பு வாயில் மேற்கு முகமாய் அமைந்துள்ளது.
இத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு சங்க இலக்கியப் பாடல்கள் பல சான்றாக அமைந்துள்ளன. கல்லாடம், பரிபாடல் மற்றும் திருவிளையாடல் புராணம் எனப் பல்வேறு இலக்கியங்களில் இத்தலத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார்.
எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. ஒருவர் செய்த பாவத்தை இந்தப் பிறவியிலேயே மன்னித்து நன்மை தருபவர் என்பதால் இவரை “இம்மையிலும் நன்மை தருவார்” என அழைக்கப்படுகிறார். சுவாமி சந்நிதியின் வலதுபுறம் தனி சந்நிதியில் தெற்கு நோக்கிய அன்னை நடுவூர்நாயகி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
அன்னைக்கு மத்தியபுரி அம்மன் என்ற திருநாமமும் உள்ளது. மீனாட்சியம்மன் கோவிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்னதாக சிவன்- அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருள்வார்கள். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம் ஆகும்.
பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. ஆலயத்தில் அறுபது மற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன் வல்லப சித்தராக வந்து கல்யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார்.
பொதுவாக செம்பில் தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்புடன் காணப்படுகிறது. மத்தியபுரி நாயகி சன்னிதிக்கு பின்புறம், அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.
அதிசய சிவலிங்கம்:
பொதுவாக, சிவலிங்கத்தின் முன் பகுதியையே தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் கிடைக்கிறது. இதற்கு காரணம், சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்யும் நியதி.
ஆகவே பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன்-அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளி, மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கிறது.
சித்தர் சிவன்:
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவருக்கு பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமைகளில் சாம்பிராணி பதங்க காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை மற்றும் சித்திரை மாதத்தில் பௌர்ணமி, ஆடி அமாவாசை நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
கல் ஸ்ரீசக்கரம்:
பொதுவாக செம்பில் வரைந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். திருமணத்தடை உள்ள பெண்கள் பாலாபிஷேகம் செய்து, பாவாடை, தாலி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகின்றனர்.
வருடத்திற்கு 54 முறை அபிஷேகம்:
பூஜையின் போது அர்ச்சகர், லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு பூஜிப்பார். இங்கு லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடைபெறும். சிவராத்திரியன்று ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கிறது.
ராஜ உபசார அர்ச்சனை:
மதுரையில் பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி தலம் ஆகும். புது கட்டிடம் கட்டத் தொடங்குபவர்கள் இங்கு மணலை வைத்து வேண்டி, கட்டிடம் கட்டும் மணலுடன் கலக்கி பணியைத் தொடங்குகிறார்கள். தலைமைப் பொறுப்புள்ள பதவிக்கு வேண்டியும், பொறுப்பான பதவியை ஏற்கும் முன்பும் ராஜ உபசார அர்ச்சனை செய்வார்கள்.
கோவில் முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி காட்சி தருகின்றனர். ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்ட நிகழ்வின் அடிப்படையில் மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் அருள்கிறார்.
பரிந்துரை செய்யும் சண்டிகேஸ்வரர்:
சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரருக்கு வழிப்பாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்தில் சண்டிகேஸ்வரருக்கு விசேஷ பூஜை செய்கிறார்கள். பிரச்சினைகளில் இருந்து விடுபட சண்டிகேஸ்வரருக்கு மாலை அணிவித்து வழிபடுகின்றனர். அவரை 'பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்றும் அழைக்கின்றனர்.
தல சிறப்புகள்:
கோவில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் வீற்றிருந்து அருள்கிறார். உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் மிளகு ரசம், காரமான புளியோதரை சாதம் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
அம்மன் கோவில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா?
இக்கோவிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது. “பூலோக கைலாயம்” என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.
திருவிழா:
மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை சிவராத்திரி திருக்கார்த்திகை
கோவில் திறக்கும் நேரம்:
காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக கோவில் திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |