ரூபாய் 23 கோடிக்கு காப்பீடு.. 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளியில் ஜொலிக்கும் விநாயகப் பெருமான்
மும்பையில் 66 கிலோ தங்கம் 335 கிலோ வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க கூடிய மும்பையின் மிகுந்த பணக்கார ஜிஎஸ்பி மண்டல் விநாயக சிலை ரூபாய் 703 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலாகக் கருதப்படும் கிங்ஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி. சேவா மண்டல், அவர்கள் தங்களுடைய 72 ஆவது ஆண்டு விநாயக சதுர்த்தி வருகின்ற 2026 ஆம் ஆண்டு 14ஆம் தேதி துவங்கி 17ஆம் தேதி வரை என ஐந்து நாட்கள் மிக விமர்சையாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
இந்த விழாவின் பொழுது இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் மகா கணபதி சிலைக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட 66 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளன.

அந்த வகையில், கடந்த ஆண்டு இந்த மண்டல சார்பில் ரூபாய் 474 கோடி காப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு பாதுகாப்பு மற்றும் வசதிகளை இன்னும் மேம்படுத்தும் வகையில் ரூபாய் 703 கோடி 27 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதன்படி விநாயகருக்கு பிரதிஷ்டை செய்யக்கூடிய சிலை மற்றும் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த ரத்தின கற்களுக்கு இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதைவிட, முக்கியமாக விழாவிற்கு வருகை தரக்கூடிய பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உயிர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மண்டலின் செய்தி தொடர்பாளர் அமித் பை கூறுகையில் பொறுப்புள்ள ஒரு அமைப்பாக விழாவிற்கு வருகின்ற ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்புகளுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது எங்களுடைய கடமையாகும் என்றும், அதனால் இந்த மெகா காப்பீடு திட்டத்தை எடுத்துள்ளோம் என்றார்.

டிஜிட்டல் ரசீதுகள்:
மேலும், இந்த விழாவில் காகித பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டு முதல் அவர்கள் பாரம்பரிய காகித ரசீதுகளுக்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ரசீதுகள் வழங்கப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதே போல், இந்த ஐந்து நாள் விழாவில் தினமும் 40 பக்தர்களுக்கு அன்னதானமும், 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பிரசாதமும் வழங்கப்பட உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |