ஆன்மீகம்: பூனை அடிக்கடி உங்கள் வீட்டிற்கு வருகிறதா? இதை அலட்சியப்படுத்தாதீர்கள்

By Sakthi Raj Jul 22, 2026 08:42 AM GMT
Report

வீட்டிற்கு அடிக்கடி பூனை வருகிறது என்றால் ஆன்மீக ரீதியாக அதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது நம்முடைய வீட்டின் க்தி பூனைக்கு தெரியுமாம். பூனை எப்போதும் நல்ல நேர்மறை சக்திகள் சூழ்ந்து இருக்க இடத்திற்கு மட்டுமே வருகின்றது.

அந்த வகையில், பூனை தவறாமல் ஒரு இடத்திற்கு வருகிறது என்றால் அந்த குடும்பம் நல்ல உணவு மற்றும் செழிப்பாக வாழ்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. மேலும், பூனைகள் எப்பொழுதும் தங்களுக்கு உணவு கிடைக்கக்கூடிய பாதுகாப்பான இடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும்.

ஆன்மீகம்: பூனை அடிக்கடி உங்கள் வீட்டிற்கு வருகிறதா? இதை அலட்சியப்படுத்தாதீர்கள் | Is It Good Or Bad If Cat Coming Daily To Home

ஆக, அடிக்கடி பூனை வருகிறது என்றால் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருப்பதை அவை எடுத்துக்காட்டுகிறது. பூனைகள் எப்பொழுதும் தீய சக்திகள் மற்றும் நல்ல அதிர்வலைகள் இல்லாத இடங்களுக்கு செல்வதில்லை.

கோவிலில் தேங்காய் உடைக்கும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கியமான 9 சகுனங்கள்

கோவிலில் தேங்காய் உடைக்கும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கியமான 9 சகுனங்கள்

ஆக, நம் வீட்டிற்கு அடிக்கடி பூனை வருகிறது என்றால் நம்முடைய வீடானது நிம்மதியான மற்றும் பாதுகாப்பு நிறைந்த செழிப்பான சூழல் கொண்ட இடமாக இருப்பதின் அர்த்தத்தை அவை குறிக்கிறது.

அதிலும், நம்முடைய வீடுகளில் பூனை குட்டி போட்டால் அது மிகச் சிறந்த சகுனமாக பார்க்கப்படுகிறது. அவை குட்டி போடுகின்ற பொழுது அந்த குடும்பத்தில் உள்ள தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US