வீட்டில் குளவிகள் கூடு கட்டுவது நல்லதா?கெட்டதா?
ம்னிதர்களின் வாழ்க்கையில் பறவைகளும் விலங்குகளும் பெரும் பங்கு வகிக்கிறது.அவர்களிடம் இருந்து நாம் தப்பிக்க முடியாது.அப்படியாக நம்முடைய வீடுகளை சுற்றி இருக்கும் மரங்களில் வீட்டை சுற்றி பறவைகள் கூடு கட்டுவது உண்டு.
அதே போல் சிறு சிறு பூச்சிகள் வீட்டிற்கு உள்ளேயே கூடு கட்டுவதை பார்க்க முடியும்.அந்த வகையில் வீட்டை சுற்றிலும் அதிக அளவில் கூடு கட்டும் விஷயங்களில் மிகவும் சுலபமாக கூடு கட்டும் பூச்சிகளில் குளவியும் ஒன்று.வீட்டில் அதிகப்படியாக இதை நாம் பார்க்க முடியும்.
அவ்வாறாக வீட்டில் குளவி கூடு கட்டுவதில் நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் இருக்கும்.நாம் இப்பொழுது வீட்டில் குளவி கூடு கட்டுவது நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம். வீட்டில் குளவி கூடு இருந்தால் மிகவும் நல்லதாக பார்க்க படுகிறது.
குளவி தூய்மையான மண்ணை கொண்டு மிகவும் கவனமாக கூடு கட்டும் பூச்சியாகும்.மரத்தில் இருந்து மரத்தூளை கொண்டு வந்து, பற்களால் கடித்து அதனை மென்மையாகி, அதில் தனது எச்சிலை கலந்து தான் குளவி கூடு கட்டும்.
அறுகோண வடிவில் கட்டும் இந்த கூட்டில் அறைகளை அமைக்கும் குளவி ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு முட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ளும். குளவி தன் இனப்பெருக்கத்திற்காக கூடு கட்டும்.ஆதலால் அவை வீட்டில் நல்ல விஷயமாக பார்க்க படுகிறது.
அதாவது வீட்டில் திருமண தடை இருந்தால் அது விலகி திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வீட்டில் பண கஷ்டம் இருந்தால் அவை விலகி நல்ல வரவு உண்டாகும்.கடன் வாங்கி இருந்தாலும் அதை எளிதில் திருப்பி அடைக்க முடியுமாம்.
அதே போல் கடன் கொடுத்திருந்தாலும் அந்த பணம் சிரமமின்றி திரும்ப பெற முடியும் என்று நம்ப படுகிறது. மேலும் பூஜை அறையில் குளவி கூடு கட்டுவது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. அதுவும் வடகிழக்கு மூலையில் குளவி கட்டினால் பல நன்மைகள் கிடைக்கும்.
எனவே இந்த கூட்டை எக்காரணம் கொண்டும் கலைக்கக் கூடாது.ஆனால் சமையலறையில் குளவி கூடு கட்டினால் அது அபசகுணமாக கருதப்படுகிறது.இவ்வாறு கூடு கட்டும் பொழுது நம்முடைய வீட்டில் பண தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.
மேலும்,குளவி சற்று விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.குளவி எதிர்பாராமல் கொட்டிவிட்டால் அதன் விஷம் உடல் முழுவதும் ஏறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆதலால் குளவி கொட்டிய இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவினால் விஷம் ஏறாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |