இந்த உடுக்கை பாடலை கேட்டால் சனி தோஷம் விலகுமா?
ஹரியாகிய மஹாவிஷ்ணுவுக்கும், ஹரனாகிய சிவபெருமானுக்கும் தெய்வக்குழந்தையாக ஹரிஹர புத்திரன் அவதரித்தார்.
அவரே பந்தள மன்னரின் வளர்ப்பு மகனாக மணிகண்டனாக அதாவது ஸ்வாமி ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து வந்தார்.
மணிகண்டனுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் அதிகம். ஐயப்பனை நினைத்து விரதம் இருந்து மாலை அணிந்து பதினெட்டு படி ஏறி ஸ்வாமி தரிசிக்க கோடானகோடி மக்கள் வருடாவருடம் செல்கின்றனர்.
அப்படியாக ,ஐயப்பன் வரலாற்றை "சாஸ்தா பாட்டு "என்று மலையாளத்தில் பாடுவார்கள், அதை கேட்டால்" சனி தோஷம் "விலகும் என்கின்றனர். அதை பற்றி பார்ப்போம்.
சாஸ்தா பாட்டு
ஒரு முறை புலிப்பாலுக்காக காட்டுக்கு சென்ற ஐயப்பன், அங்கு முனிவர்களுக்கு இடையூறு செய்த மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்தார்.
அன்று ஸ்வாமி ஐயப்பன் அவதாரம் எடுத்த நோக்கம் நிறைவேறியதும் சபரிமலையில் ஐயப்பனாக கோயில் கொண்டார், இதை ஐய்யப்பன் வரலாறாக உடுக்கை அடித்து பாடுகின்றனர்.
இந்த "சாஸ்தா பாடலில் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். கறுப்பன், வாபர் என்னும் இரு நண்பர்கள் அவரின் வெற்றிக்காக பாடுபட்டனர்.
பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்செவம், வேளார்சேவம் என்னும் ஏழு பிரிவுகளாக சாஸ்தா பாடல்கள் உள்ளன.
" சேவம்" சேவகத்தை குறிக்கும் சொல், பாண்டிய மன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணிபுரிந்த வரலாற்றை உடுக்கை அடித்தபடியே கதையாக பாடுவர் .
இந்த பாடலை கேட்கும் பொது ஐயப்பன் கண் முன் வந்து போவது போல் இருக்கும், இந்த பாடலை பாடினாலும் கேட்டாலும் சனி தோஷம் விலகும் என நம்பப்படுகிறது.